Wednesday, February 11, 2015

செட்டிநாடு காளான் மசாலா / Chettinad mushroom masala


தேவையான பொருட்கள்;
பட்டன் காளான் - கால் கிலோ
வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 100கிராம்
பச்சை மிள்காய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மல்லி கருவேப்பிலை- நறுக்கியது சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
வறுத்துப் பொடிக்க:
முழு மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம்,சோம்பு - தலா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
ஏலம் பட்டை(சிறிய துண்டு) கிராம்பு - தலா 1 அல்லது 2




சுத்தமாக கழுவி நறுக்க வேண்டியவைகளை நறுக்கி ரெடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடானவுட்ன் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய காளான் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.
வறுத்துப் பொடி செய்ததை சேர்க்கவும்.
நன்கு ஒரு சேர பிரட்டி வேக விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.
சுவையான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.
சூடாகப் பரிமாறவும்.சப்பாத்தி,சாதம் வகைகளுடன் பரிமாறலாம். பெப்பர் சிக்கன் டேஸ்ட் போலவே இருக்கும்.வெஜிடேரியன்ஸ் செய்து சாப்பிட்டு பாருங்க.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்...!

நன்றி சகோதரி...

Shamee S said...

சூப்பர்....செமையா இருக்கு அக்கா...இந்த வீகெண்ட் செஞ்சுடலாம்....
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க குறிப்பு பார்க்க சந்தோஷமாக இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

mouth watering recepie

பரிவை சே.குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை அக்கா..