Saturday, February 21, 2015

முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல் / Drumstick leaves kuttu / milakuuttal

 தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை - 3 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல்  - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
சேர்த்து அரைக்கவும்.


 தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.


செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.


 ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.
 கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.

 கீரை சேர்த்து வதக்கவும்.
 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
 ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.
பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.
வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.
ஐடியா விஜிஸ் வெஜ் கிச்சன்.கொஞ்சம் என் டேஸ்டிற்கு தக்க சிறு மாற்றம் செய்து கொண்டேன்.சூப்பர் விஜி. மிக்க நன்றி.
என்னுடைய கத்திரிக்காய் மிளகூட்டல் குறிப்பிற்கு இங்கு கிளிக்கவும்.


3 comments:

சாந்தி மாரியப்பன் said...

சத்துள்ள சமையல். எந்தக்கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாமா? முருங்கையும் வெந்தயக்கீரையும் ருசியில் ஒன்று விட்ட சகோதரிகளாயிற்றே :-)

Asiya Omar said...

சாந்தி,எல்லாக்கீரையும் பொருத்தமாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் பருப்பு அதிகம் சேர்ப்பதால் சுவை நன்றாகவே இருக்கும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

முருங்கைக்கீரை கூட்டு

படங்களும், செய்முறைகள் சொல்லிய விதமும் அருமை. பாராட்டுக்கள்.