Tuesday, February 24, 2015

அகத்திக்கீரைச் சாறு / சால்னா / Humming bird tree leaves salna / Agathi keerai salna

தேவையான பொருட்கள்:
கொழுந்து அகத்திக்கீரை - 3 கப்
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பூண்டு பல் - 6 
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
அரிசி கழுநீர் - தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
அரிசி - 2 டேபிள்ஸ்பூன்(வறுத்துக் கொள்ளவும்)
முந்திரி பருப்பு உடைத்தது - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2


எங்கள் தோட்டத்தில் விளைந்த அகத்திக் கீரை (ஆர்கானிக்)

செய்முறை:
அகத்திக் கீரையை  உருவிக் கொள்ளவும்.


 நன்கு அலசி தண்ணீர் வடிக்கவும்.
 
அரைக்கச் சொன்னதை அரைத்து வைக்கவும்.
 பூண்டு வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.
 தாளிக்க தயார் செய்யவும்.
 குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உ.பருப்பு,சீரகம்,கிள்ளிய வற்றல் போட்டு தாளிக்கவும்.
 வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

 கீரை சேர்க்கவும்.
 நன்கு வதங்க விடவும்.

 அரிசி கழனி சேர்க்கவும்.
 

 சீரகத்தூள் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
 குக்கரில் 1 அல்லது 2 விசில் வைத்து இறக்கவும்.
 ஆவியடங்கிய பின்பு திறந்து அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

 உப்பு சரிபார்க்கவும்.
 சால்னா கெட்டித்தனமைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொத்திக்க விடவும்.
அடுப்பை அணைக்கவும்.


பரிமாறவும்.
சூப்பர் சுவையுள்ள ஆரோக்கிய அகத்திக்கீரைச் சால்னா  ரெடி.
இப்படி சமைக்கும் அவ்வளவாக கசக்காது.


1 comment:

பரிவை சே.குமார் said...

அருமையான செய்முறை அக்கா.