Monday, February 23, 2015

சிறுகிழங்கு வறுவல் / Sirukizhangu varuval

தேவையான பொருட்கள்:
சிறு கிழங்கு - கால் கிலோ
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
சிறுகிழங்கை தண்ணீரில் ஊற போட்டு மண் போக நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
கிழங்கின் தோலை கத்தி கொண்டு சுரண்டி எடுக்கவும்.
வேலை கொஞ்சம் அதிகம் தான், ஆனால் ருசி நல்லாயிருக்கும்.
இப்படி வட்டம் வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
முக்கால் வேக்காடு வெந்தவுடன் தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் சூடு செய்யவும்.கடுகு,பெருங்காயம் கருவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த சிறுகிழங்கை சேர்க்கவும்.
முதலில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் வாடை மடங்கியதும் மற்ற தூள் வகைகளை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.நாம் வேக வைக்கும் பொழுது உப்பு சேர்த்திருப்பதால் மீண்டும் தேவைப்பட்டால் மட்டுமே சேர்கவும்.

நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிறுகிழங்கு வறுவல் ரெடி.
சாதம் வகைகளுடன்  பக்க உணவாகப் பரிமாறலாம்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! செய்து பார்க்கிறோம்... நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

பொங்கலுக்கு வாங்கிய கிழங்கை அப்படியே போட்டு வைத்திருக்கிறேன். செய்யணும்.

தேங்காய் மசாலா போட்ட துவரனும் நல்லாயிருக்கும்.

Saratha J said...

சிறுகிழங்கு வறுவல் அருமையான பதிவு. வெகு நாட்களுக்கு பிறகு எனது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக மிக நன்றி. நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் வாருங்கள்.

Shamee S said...

வறுவல் நன்றாக இருக்கிறது அக்கா..செய்ய ஆசை தான்..வேலை அதிகம் எடுக்கும் போல!!!!!