Tuesday, March 24, 2015

பாகற்காய் கொத்துப்பருப்பு / Bittergourd channadal

 தேவையான பொருட்கள்;
பாகற்காய், கடலைபருப்பு,வெங்காயம் ,தக்காளி எல்லாம் தலா 100 கிராம் எடுத்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம்மசாலா - கால் டீஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிள்காய் - 1
சீரகம் ,சோம்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:

 கடலைப்பருப்பை குறைந்தது 1 -2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 நறுக்க வேண்டியவற்றை தயார் செய்யவும்.
 குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உ.பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.லேசாக சிவந்து வரும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
 தக்காளி,பாகற்காய் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.

மஞ்சப்பொடி,மிளகாய்ப்பொடி  சேர்க்கவும்.
 சிறிது பிரட்டி விடவும்.
 கடலை பருப்பு சேர்த்து தேவைக்கு அரைகப் தண்ணீர் சேர்க்கவும்.
 மூடி 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் திறக்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
 அரைத்த தேங்காய், நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.கலந்து கொதிக்க விடவும்.
 சுவையான பாகற்காய் கொத்துப்பருப்பு ரெடி.
சாதம்,ரொட்டிவகைகளுடன் பரிமாறலாம்.
கிட்டதட்ட கொத்துக்கறி கடலைபருப்பு வைப்பது போல் தான்.
கொத்துக்கறி கடலை பருப்பு ரெசிப்பி பார்க்க கிளிக்கவும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி...