Tuesday, March 10, 2015

கொடைமிளகாய் சாம்பார் / Capsicum Sambar



தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
(பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்)
கொடைமிளகாய்  மீடியம் சைஸ் - ஒன்னரை அல்லது 2
சின்ன வெங்காயம் - 8 அல்லது மீடியம் சைஸ் வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு அல்லது தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
செய்முறை:
நான் இங்கு எல்லா நிற  கொடைமிளகாயும் கலந்து நறுக்கி எடுத்துள்ளேன்.சின்ன வெங்காயம் தோல் உரித்து பெரிதாக இருந்து பாதி பாதியாக கட் செய்து வைக்கவும்.ஒரு சிறிய தக்காளி நறுக்கி வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும்,.சூடானவுடன், கடுகு,வெந்தயம் பொரிய விடவும், பெருங்காயம்,வற்றல் கருவேப்பிலை சேர்க்கவும்.
 அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 தக்காளி சேர்த்து வதக்கவும்.
 கொடைமிளகாய் சேர்க்கவும்.
 சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 தேவைக்கு புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்கட்டும்.
 சாம்பார் பொடி சேர்க்கவும்.
 ஒரு சேர கொதிக்க விடவும்.
 வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.
 கெட்டித்த்னமைகேற்ப தண்ணீர் சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.கொதி வரும்.

நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
அடுப்பை அணைக்கவும்.
சூப்பர் சுவையும் மணமுள்ள கொடை மிளகாய் சாம்பார் ரெடி.

எல்லா நிற கொடைமிளகாயும் சேர்க்கும் பொழுது ஒவ்வொரு துண்டு காயும் எடுத்துச் சாப்பிடும் பொழுது வெவ்வேறு சுவையில் அசத்தலாக இருக்கும்.
சாதம்,இட்லி தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். சீசன் அப்ப செய்து சாப்பிடலாம்.  கலர் கலராக கொடைமிளகாய் யாருக்குத்தான் பிடிக்காது.அதுவும் சாம்பாரில் போட்டு சாப்பிடும் பொழுது அலாதி சுவை.

4 comments:

Farin Ahmed said...

Never heard this sambar before.. paarkave sappidanum pola irruku akka

பரிவை சே.குமார் said...

அருமை அக்கா...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை சகோதரி...

இதுவரை வீட்டில் செய்ததில்லை... பார்ப்போம்...

Shamee S said...

பச்சை நிற குடைமிளகாயில் ஒருமுறை 2 வருடங்களுக்கு முன் சாம்பார் செய்தேன்..நியாபகபடுத்தி விட்டீர்கள் அக்கா..அடுத்த முறை உங்கள் ஸ்டைலில் தான் கலர் கலராக குடைமிளகாய் சேர்த்து.