Monday, March 16, 2015

கருவேப்பிலை தொக்கு / Karuveppilai Thokku


தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை - ஒரு கப்
நல்ல எண்ணெய் - 3 - 4 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
முழு பூண்டு மீடியம் சைஸ் - 1
புளி - நெல்லியளவு அல்லது கோலியளவு
உப்பு - தேவைக்கு.
வறுத்துப் பொடிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2  டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 5 
செய்முறை:

வெங்காயம்,பூண்டு தோல் உரித்து தண்ணீரில் அலசி வைக்கவும்.கருவேப்பிலையையும்  உருவி நன்கு அலசி வைக்கவும்.
 ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு வெடித்தவுடன் வெந்தயம், கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு போட்டு சிவற வறுக்கவும்.மிளகும் ,மிளகாய் வற்றலும் சேர்த்து வறுக்கவும்.
 ஆற விடவும்.
 வறுத்தவற்றுடன் ஃப்ரெஷ் கருவேப்பிலையையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் பொடிக்கவும்.
தேவைக்கு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் நல்ல எண்ணெயை சூடாக்கவும்.சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
நெல்லியளவு புளியை அரைகப் தண்ணீரில் ஊற விட்டு கரைத்து சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும். அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.நெருப்பு மீடியமாக இருக்க வேண்டும்.சிறு துண்டு வெல்லம் இருந்தால் சேர்க்கலாம்.
 
புளி குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.காரம் அவரவர் விருப்பம்.
எண்ணெய் மேலே வரும் பொழுது அடுப்பைக் குறைத்து சிறிது நேரம் வைக்கவும்.. நன்கு சுண்டி வர வேண்டும்.
அடுப்பை அணைக்கவும்.ஆற விட்டு ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும்.
சுவையான சத்தான கருவேப்பிலை தொக்கு ரெடி.

வெங்காயம் ,பூண்டு சேர்க்க விருப்பமில்லாதவர்கள் பெருங்காயம்   சேர்க்கலாம்.
இதனை சுடு சாதத்துடன் கலந்து சில துளிகள் நெய் விட்டு சாப்பிடலாம். துணைக்கு வெறும் அப்பளம் இருந்தால் கூட சூப்பராக இருக்கும். ஒரு  டேபிள்ஸ்பூன் போட்டால் ஒரு ப்லேட் சாதம் கலந்து சாப்பிடலாம்.
கருவேப்பிலையின் சத்து பற்றி நாம் அனைவரும் அறிந்ததே,கருவேப்பிலையில் தொக்கு அல்லது துவையல் அல்லது பொடி செய்து சாப்பாட்டில் சேர்த்து வருவது உடல் நலத்திற்கு நல்லது..

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி சகோதரி...

Life with Spices said...

manam veesudhuu..sooper

ADHI VENKAT said...

சுவையான தொக்கு. படங்களுடன் பார்க்கும் போதே ஆவலாய்..

Sangeetha Nambi said...

Literally mouthwatering here

Shamee S said...

தொக்கு சூப்பர் அக்கா.
சைட்டிஷா கூட சாப்பிடலாம் போல.

Radha Rani said...

இன்று இந்த தொக்கு செய்து பார்த்தேன் ஆசியா.. ரொம்ப நல்லா இருந்தது. இனி அடிக்கடி இதை செய்வேன். பகிர்வுக்கு மிக்க நன்றி ஆசியா.

கோமதி அரசு said...

தொக்கு அருமையாக இருக்கிறது.