Tuesday, March 3, 2015

குடல் கூட்டு / சுருட்டிய குடல் / Lamb tripe masala


தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்து நறுக்கிய ஆட்டுக்குடல் - சிறியது - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  - 3 டீஸ்பூன்
கரம் மசாலா -கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
சீரக,சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
நறுக்கிய மல்லி கருவேப்பிலை - சிறிது.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
சுத்தம் செய்து நன்கு கழுவிய ஆட்டுகுடலை, ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் தூள் தேவைக்கு உப்பும் ,தண்ணீரும் சேர்த்து குக்கரில் முதல் விசில் வந்த பின்பு அடுப்பைக் குறைத்து 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.


ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
கடாயில் எண்ணெய் விடவும் காய்ந்தவுடன் சிம்மில் வைத்து ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து உடன் அனைத்து மசாலா பொடியும்  (மிளகுத்தூள் தவிர)சேர்க்கவும்.பிரட்டவும்.குடலை  வேக வைத்த தண்ணீர் கொஞ்சமாக இருந்தால் அதனுடன் சேர்க்கவும்.
பிரட்டி விடவும்.நன்கு கொதிக்கும் பொழுது நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

நன்கு பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.சுருண்டு வரும் பொழுது மிளகுத்தூள்  சேர்க்கவும்.நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு பரிமாறினால் நல்ல மணத்துடன் இருக்கும்.

சாதம்,சப்பாத்தி,பரோட்டா,தோசையுடன் பரிமாறலாம்.சூப்பராக இருக்கும்.கடைசி படம் தெளிவாகயில்லை. அதனால் என்னால் இணைக்க முடியவில்லை.

2 comments:

பரிவை சே.குமார் said...

எனக்கு குடல்கறி ரொம்பப் பிடிக்கும்...
ஊருக்குப் போகும் போது இந்த முறையில் செய்து சாப்பிடணும்... என்ன பிரச்சினையின்னா வீட்டில் மனைவி குழந்தைகளுக்குப் பிடிக்காது...
அருமையான செய்முறை அக்கா...

Asiya Omar said...

தம்பி குமார், தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.