Saturday, March 7, 2015

மைக்ரோவேவ் ஒயிட் ரைஸ் / Microwave white rice.

பேச்சிலர்ஸ், வேலைக்குப் போகும் இளம் பெண்களுக்காக இந்த போஸ்டிங். நிச்சயம் உபயோகமாக இருக்கும்.மொபைலில் கிளிக்கிய சாதாரண  வீடியோவும் பகிர்ந்திருக்கிறேன். 
 தேவையான பொருட்கள்:
பொன்னி புழுங்கல் அரிசி - கால் கிலோ
தண்ணீர் - 500 - 600 மில்லி
உப்பு - சிறிது தேவைக்கு.
அரிசியின் தரத்தைப் பொருத்து சமைக்கும் நேரம் தண்ணீர் அளவு வேறுபடலாம்.பெரும்பாலும் வேறுபாடு வராது.
செய்முறை:

 முதலில் அரிசியை நன்கு அலசி தண்ணீர் சேர்த்து  ஊற வைக்கவும்.பின்பு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
 பின்பு தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்,சிறிது உப்பும் சேர்க்கவும். மைக்ரோவேவில் வைக்கும் பொழுது மூடி போட்டு வைக்க வேண்டும்.
video
மைக்ரோவேவில் 15 -20 நிமிடம் வைத்து 2 நிமிடம் ஸ்டாண்டிங் டைம் வைத்து  பின்பு ஓவனில் இருந்து கவனமாக எடுக்கவும்.
 மூடியை திறந்து கிளறி விடவும்.
சூப்பரான மைக்ரோவேவ் ஒயிட் ரைஸ் ரெடி. நல்ல சாஃப்டாக உதிரியாக இருக்கும்.
இதிலே உப்பிற்கு பதில் ஒரு சிக்கன் சூப் கியூப் போட்டு.ஒரு டீஸ்பூன் ஆயில்,ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஊறிய பாசுமதி அரிசியை வைத்து மேற்சொன்னது போல் வைத்து எடுத்தால் நல்ல மணமான சிக்கன் சூப் ரைஸ் ரெடி. இதனை கொஞ்சம் அலங்கரித்து கிரில் சிக்கனுடன் சாப்பிடலாம்.
கொஞ்சமாக ஃப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது ,தம் பிரியாணி செய்யும் பொழுது இப்படி இப்படி ரைஸ் வேக வைத்து எடுக்கலாம்.
குக்கர் சோறு,வடிக்கும் சோறை விட இது இலகுவாக செய்யக் கூடியது. மைக்ரோவேவ் வீட்டில் இருந்தால் நீங்களும் செய்து பாருங்க.நான் எப்பவாவது இப்படி செய்வேன்.இதையே ஒரு பதிவாக போட்டால் என்ன என்று நினைத்ததால் இந்த பகிர்வு.
பாத்திரம் கழுவது,மற்றும் அடுப்பு முன்னாடியே நிற்காமல் டைம் செட் செய்துவிட்டு நாம் மற்ற வேலையை பார்க்கலாம். சிக்கன் சமையல் செய்றவங்க இப்படி செய்யலாம்.
மைக்ரோவேவ் சாதாரணமாக உபயோக்கிப்பவர்கள் மைக்ரோவேவ் சேஃப் பவுல் வைத்து செய்யலாம். கவனம் மிக அவசியம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மைக்ரோவேவ் வாங்க வேண்டும்...!