Friday, March 13, 2015

மட்டன் விண்டாலு / Mutton Vindaloo

மட்டனோடு தயிர் தக்காளி சேர்க்காமல் வினிகர் சேர்த்து செய்தது வித்தியாசமாக அருமையாக  இருந்தது. வேலைக்குச் செல்பவர்கள் இது மாதிரி மட்டனை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவைக்கு எடுத்து சூடு செய்து ஊறுகாய் மாதிரி அப்ப அப்ப எடுத்துச் சாப்பிடலாம்.வெரைட்டி ரைஸ் உடன்  பயணத்திற்கு  எடுத்துச் செல்ல ஏற்றது.
வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மட்டன் விண்டாலு செய்து அசத்தியாச்சு. நீங்களும் செய்து பாருங்க.
 தேவையான பொருட்கள்;
மட்டன் - அரைக்கிலோ
நறுக்கிய வெங்காயம்- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன் - விரும்பினால் அரை டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி -1 டீஸ்பூன்
வினிகர் - ஒன்னரை டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லிக்கீரை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஒரு பெரிய உருளைக்கிழங்கு
உப்பு தேவைக்கு.

செய்முறை:
 குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சிவற வதக்கவும்.
 இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 குறிப்பிட்ட பொடி வகைகள் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டவும்.வினிகர் சேர்க்கவும்.
 மட்டன் சேர்க்கவும்.
 தேவைக்கு உப்பு சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
 ஒரு கப் தண்ணீர் விடவும்.மல்லி இலை சேர்த்து மூடி அடுப்பை மீடியமாக வைத்து  5 அல்லது 6 விசில் வர விடவும்.

 ஆவியடங்கியவுடன் திறந்து நறுக்கிய தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும்.பிரட்டி விடவும்..

 மூடி வெயிட் போடவும்.மீண்டும் 1 -2 விசில் வரட்டும்.அடுப்பை அணைக்கவும். அல்லது உருளைக்கிழங்கை வேக வைத்தும் சேர்த்து பிரட்டியும் இறக்கலாம்
 உருளைக்கிழங்கும் மட்டனும் சேர்ந்து வெந்து சூப்பர் சுவையுடன் இருக்கும்.

சுவையான் மட்டன் விண்டாலு ரெடி. 
நான் இனி அடிக்கடி செய்வேன். செமையாக இருந்தது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

செமையாகத் தான் இருக்கு... செய்து பார்க்கிறோம்...