Saturday, March 14, 2015

இறால் பிரியாணி ( வீடியோ சமையல்) / Prawn Briyani - Video Samaiyal

இந்த வீடியோ சும்மா நான் சமைக்கும் பொழுது அப்படியே மொபைலில் எடுத்தது. லைட்டிங் சுத்தமாக இல்லை. அதை கவனிக்காமல் எடுத்து விட்டேன்.என்றாலும் இங்கு விசிட் செய்வது நம்ம மக்கள் தானேன்னு பகிர்ந்தாச்சு.
வீடியோ எடுத்ததால் ஸ்டெப் பிக்ஸ் எடுக்காமல் விட்டு விட்டேன்.  இதே முறையில் செய்து பாருங்க.அருமையாக இருக்கும்.கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு வீடியோ பாருங்க   ஃப்ரெண்ட்ஸ். அப்புறம் உங்க கருத்தைச் சொல்லுங்க. 




தேவையான பொருட்கள்;
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - அரைக்கிலோ
உரித்து சுத்தம் செய்த  இறால் - அரைக்கிலோ
(இறாலில் ஊற வைக்க மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,உப்பு தேவைக்கு)
இது தவிர - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
நறுக்கிய தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய மல்லி,புதினா - தலா ஒரு கைப்பிடியளவு
எலுமிச்சைப்பழம் - பாதி
உப்பு - தேவைக்கு.
தயிர் - அரை கப்
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
பின்ச் சாஃப்ரான் - சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
இறால் பிரியாணி மசாலா / கரம் மசாலா  பொடிக்க :
ஏலக்காய் - 5 ,கிராம்பு - 5 ,பட்டை - 2 துண்டு, 
சீரகம்- 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன்,மிளகு - 10 எண்ணம்
சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
நான் என் பிரியாணி செய்முறையில் வாசனைபொருட்களை பொடித்து தான் சேர்ப்பது வழக்கம்.முழுசாக சேர்க்கத்தான் பிரியம் என்றாலும் ஒன்றிரண்டு தாளிக்கும் பொழுதும் சேர்க்கலாம்.
விரும்புபவர்கள் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
இறால் சுத்தம் செய்து அலசி  தண்ணீர் வடித்து வைக்கவும்.
மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து ஊற வைக்கவும்.
எல்லாப் பொருட்களும் நறுக்கி தயார் செய்யவும்.
முதலில் அடிகனமான பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.
மசாலா பிரட்டி ஊறிய இறாலை போட்டு நன்கு வதக்கி வெந்த பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
அந்த பாத்திரத்திலேயே வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.சிம்மில் வைத்து வதக்கவும்.
மல்லி புதினா ,பச்சை மிளகாய் சேர்க்கவும்.வதக்கவும்.
தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மசிய விடவும்.
பொடித்த கரம் மசாலா,மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.
தயிர் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.
ஊறிய அரிசி சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.
தண்ணீர் அரிசிக்கு 2 மடங்கு வைக்கலாம் ,அல்லது ஒன்னரை அளவு வைக்கலாம்.அரிசியின் தரம் பொருத்து தண்ணீர் அளவு மாறுபடும்.
மூடி மீடியம் ப்லேமில் வைக்கவும். உப்பு சரிபார்க்கவும்.இது தான் ரொம்ப முக்கியம்.
அரிசி வெந்து வரும் பொழுது வதக்கிய இறால்சேர்க்கவும், பாதி,எலுமிச்சை பழம் பிழியவும்.ஒரு சேர பிரட்டவும்.
சாஃப்ரான் கரைசல் சேர்க்கவும்.
அலுமினியம் ஃபாயில் கொண்டு கவர் செய்து மூடி போடவும்.அடியில் பழைய தவா வைத்து 10- 15 நிமிடம் சிம்மில் வைத்து தம் செய்து எடுக்கவும்.அடுப்பை அனைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.
சுவையான இறால் பிரியாணி ரெடி.



நீங்களும் செய்து பாருங்க,நிச்சயம் பிடிக்கும்.இதே முறையில் அரிசியை வடித்துப் போட்டும் தம் செய்யலாம். நான் எப்பொழுதும் வடித்துப் போட்டுத்தான் தம் செய்வேன்.நிறைய பேர் அரிசியை அதில் சேர்த்து செய்தால் தான் எல்லாம் சார்ந்து டேஸ்ட் நல்லாயிருக்கும் என்று சொல்வதால் அவர்களுக்காக இந்தப் பகிர்வு,.




No comments: