Saturday, March 14, 2015

ரவா இட்லி / Rava Idli

 தேவையான பொருட்கள்:
ரவை - 100 கிராம்
சற்று புளிப்பான தயிர் - 100 மில்லி
உப்பு தேவைக்கு
என்னுடைய ஐடியா - ஒரு குழிக்கரண்டி மீதி ஆன இட்லி மாவு சேர்க்கலாம்
பின்ச் - சோடா உப்பு
சேர்த்து கலந்து வைக்கவும்.
தாளிப்பிற்கு தேவையானவை:
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 1-2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி, பச்சை மிள்காய் - தலா 1 டீஸ்பூன்
நறுக்கிய கருவேப்பிலை,மல்லி இலை சிறிது.

செய்முறை:
 மேற்சொன்னவற்றை கலந்து வைக்கவும். சிறிது ஊறட்டும்.
 தாளிப்பிற்கு தயார் செய்யவும்.

 தாளிக்கவும்.
 கலந்த ரவாவில் கொட்டவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

 இட்லி தட்டில் சிறிது நெய் தடவி குழிக்கரண்டியில் மாவை எடுத்து தட்டில்  விடவும்.
 ஆவியில் 5-7 நிமிடம் அவித்து எடுக்கவும். வெந்த பின்பு ஸ்பூன் கொண்டு எடுக்கவும். எப்படி பொங்கி வந்திருக்கு பாருங்க.
 சூப்பர் பஞ்சு பஞ்சான ரவா இட்லி ரெடி.
 8-10 மீடியம் சைஸ் இட்லி வரும்.
நீங்களும்  செய்து பாருங்க. விரும்பினால் கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம் கூட வதக்கி சேர்க்கலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் அருமையான செய்முறை குறிப்பு... நன்றி...

Shamee S said...

ரவா இட்லி மெத்துமெத்துன்னு நன்றாக இருக்கு..
நான் முன்பு ஒருமுறை செய்து சரியாக அமையவில்லை..உங்கள் முறையில் செய்றேன் இப்போ..