Sunday, March 1, 2015

பீர்க்கங்காய் தோல் துவையல் / Ridge gourd peel thuvaiyal


 தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் அரைக்கிலோ சைஸ் உள்ளதில் சீவிய தோல்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய் வற்றல் - 3
புளி - அரிநெல்லியளவு
பெருங்காயம் - பின்ச்
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் வதக்க - 2 டீஸ்பூன்.

செய்முறை:
முதலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை வதக்கிக் கொள்ளவும்.
 அதே பேனில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வற்றல், கடலை,பருப்பு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை, பின்ச் பெருங்காயம்,போட்டு வருத்த பின்பு தேங்காயை மேல் கொட்டி லேசாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.
 
ஆற விடவும்.
 வதக்கிய தோலை மிக்ஸி ஜாரில் போடவும்.
 அத்துடன் அடுத்து வறுத்த பொருட்களையும்,தேவைக்கு உப்பும்  சேர்க்கவும்.
 சிறிது தண்ணீர் தெளித்து பர பரவென்று அரைத்து எடுக்கவும்.

 ஆரோக்கியமான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி. பீர்க்கங்காய் பருப்பு வைக்கும் சமயம் தோலை வீணாக்காமல் தோல் துவையலையும் செய்து பாருங்க.சூப்பராக இருக்கும்.சாதம், டிஃபன் வகைகளோடு பரிமாறலாம்.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறித்துக் கொண்டோம்... நன்றி...

Asiya Omar said...

தனபாலன் சார் மிக்க நன்றி.