Thursday, April 2, 2015

லேயர் டபுள் கா மிட்டா / லேயர் ஷாஹி துக்கடா / Layered Double Ka Meeta / Layered Shahi Thukda

தேவையான பொருட்கள்;
ப்ரெட் துண்டுகள் 10-12
ஒரு கைப்பிடி பாதாம்,ஒரு கைப்பிடி பிஸ்தா ஊற விட்டு தோல் எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதே போல் முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி, பேரீச்சம் பழம் ஒரு கையளவு நறுக்கி கொள்ளவும். ( இது விரும்பினால் தான் )
பால் - 1 லிட்டர்
சாஃப்ரான் பெரிய பின்ச்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு டின்
நெய் - டோஸ்ட் செய்ய தேவையான அளவு.

10 - 12  நபர்களுக்கு பரிமாறலாம்.
செய்முறை:
ப்ரெட் துண்டுகளை இப்படி கட் செய்து கொள்ளவும்.
நட்ஸ் ரெடி செய்து கொள்ளவும்.
பால் முக்கால் அளவு சுண்டும் அளவு காய்ச்சி கொள்ளவும்.சஃப்ரான் சேர்த்துக் கொள்ளவும்.
நெய் தடவி இப்படி முறுகலாக டோஸ்ட் செய்து எடுக்கவும்.


பால் வற்றி வரும் பொழுது ஒரு டின் கண்ட்டென்ஸ்ட் மில்க் விடவும்.நன் கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் நெய் தடவவும்.
முதல் லேயர் டோஸ் செய்த ப்ரெட் அடுக்கவும்.
அடுத்து நட்ஸ் டேட்ஸ் தூவி விடவும்.
கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு காய்ச்சிய பாலில் பாதியை விடவும்.

திரும்ப மீதியிருக்கும் டோஸ்ட் செய்த ப்ரெட் துண்டுகளை அடுக்கவும்.
நட்ஸ், டேட்ஸ்  மீண்டும் தூவவும்.
திரும்ப சுண்ட காய்ச்சிய பால் சேர்க்கவும்.
கவனமாக ஓவனில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஆறவிட்டு பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் செமையாக இருக்கும்.
சுவையான டபுள் கா மிட்டா ரெடி.
இது என் ஸ்டைல் , அவசரத்திற்கு இப்படி செய்து அசத்தலாம்.
பார்ட்டி சமயம் டெசர்ட்டில் இதையும் ஒன்றாக செய்யலாம். இது ப்ரெட் புட்டிங் போலவும் இருக்கும், ஷாகி துக்கடா அல்லது உம் அலி போலவும் டேஸ்ட் இருக்கும்.
பிடித்திருந்தால் செய்து பாருங்க.


கொஞ்சமாக செய்து பார்க்க விருப்பமுள்ளவர்கள் ரெசிப்பிக்கு இங்கே கிளிக்கவும்.

உம் அலி ரெசிபிக்கு இங்கு கிளிக்கவும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.... இப்படியும் செய்யலாமா....? சூப்பர்...!

priyasaki said...

நல்ல ரிச் ஆ இருக்கு ஆசியா. சூப்பர். அருமையான ரெசிப்பிக்கு நன்றி.