Tuesday, April 21, 2015

கேப்பை முருங்கையிலை ரொட்டி / ராகி முருங்கையிலை ரொட்டி / Ragi drumstick leaves roti

 தேவையான பொருட்கள்;
ராகி மாவு - 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
முருங்கையிலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
.உப்பு ,தண்ணீர் தேவைக்கு.
விரும்பினால் பச்சை மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் காரத்திற்கு சேர்க்கலாம்.நான் சேர்க்கவில்லை.
பரிமாறும் அளவு - 2 நபர்.

முருங்கைக்கீரை என்று இல்லை,எந்தக்கீரை வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
செய்முறை:
ஆய்ந்த முருங்கைக்கீரையை அலசிக் கொள்ளவும்,வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும். 
 வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்,வெங்காயம் கீரை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதங்கிய பின்பு சிறிது ஆறட்டும்.
 ராகி மாவு,  தேங்காய்த்துருவல் தேவைக்கு தண்ணீர் ,உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் குழைத்துக் கொள்ளவும்.அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 நான்கு உருண்டைகளாகப் பிரிக்கவும்.
 சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு கையால் ரொட்டி போல் தட்டி இரு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.விரும்பினால் சிறிது எண்ணெய் தடவி சுடவும்.

 சுவையான சத்தான ராகி முருங்கையிலை ரொட்டி ரெடி.
விருப்பாமான பக்க உணவுடன் பரிமாறலாம்.அல்லது அப்படியே சும்மாவே சாப்பிடலாம்.
மிருதுவாக அபாரச் சுவையுடன் இருக்கும்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்கவே அருமையாக இருக்கு...

செய்து பார்க்கிறோம்... நன்றி...

Mahi said...

வெறும் கேப்பை மாவு இருக்கு...இந்த ரெசிப்பிதான் தேடிட்டிருந்தேன்! தேங்க்ஸ் அக்கா!

Asiya Omar said...

மகி முருங்கைக்கீரை என்று இல்லை,எந்தக்கீரை வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.