Friday, May 8, 2015

பேக்ட் ஃபிஷ் மந்தி / Baked Fish Mandi

 தேவையான பொருட்கள்;
சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த முழு மீன் - 2 - 500 கிராம்
(விலை மீன் அல்லது சங்கரா மீன்)
பாசுமதி அரிசி - கால் கிலோ
பிரியாணி இலை - 1,ஏலம்-2 பட்டை - 1 துண்டு,கிராம்பு - 2, நட்சத்திர மொக்கு,அன்னாசிப்பூ - சிறிது,சீரகம் விரும்பினால் - சிறிது.
நறுக்கிய மல்லி,புதினா கொஞ்சம்.
பச்சை மிளகாய் - 2
பொன்னிறமாக பொரித்த வெங்காயம் - ஒரு கைப்பிடி
சாஃப்ரான் கரைசல் - ஒரு பின்ச் சாஃப்ரானை கால்  கப் சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
நெய் - 3 டீஸ்பூன்

மீன் மசாலா ஊற வைக்க:
மிளகாய்த்தூள் - 1- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகு,சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 பழத்தில் இருந்து தேவைக்கு.
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேவைக்கு உப்பு.

மேற்சொன்னபடி மசாலா தயார் செய்து மீனில் விரவி வைக்கவும்.

அரிசியையும் ஊற வைக்கவும்.
நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம்  பொன்னிறமாக பொரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.பிரியாணி இலை - 1,ஏலம்-2 பட்டை - 1 துண்டு,கிராம்பு - 2, நட்சத்திர மொக்கு,அன்னாசிப்பூ - சிறிது,சீரகம் விரும்பினால் - சிறிது.சேர்க்கவும்.கவனாமாக சரியான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.அரிசி சேர்த்து  90 சதவீதம் வெந்ததும் வடித்து வைக்கவும்.


ஒரு பேக்கிங் பவுலில் 2 டீஸ்பூன் நெய் தடவவும்.
மீனை வைக்கவும்.

அதன் மேல் மல்லி,புதினா, பொன்னிறமாக பொரித்த வெங்காயம்,கீரிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்து வடித்த சோறை சேர்க்கவும். மேலே ஒரு டீஸ்பூன் லைம் சேர்க்கவும்.


மல்லி புதினா, ப்ரவுன் ஆனியன், சாஃப்ரான் கரை சல் சேர்க்கவும். சோறு ட்ரையாக தெரிந்தால் சிறிது பால் தெளிக்கலாம்.ஒரு டீஸ்பூன் நெய் மேலே போட்டு விடவும்.

அலுமினியம் ஃபாயில் போட்டு கவர் செய்யவும்.
முற்சூடு செய்த எலெக்ட்ரிக் அல்லது கேஸ் ஓவனில் மீடியம் ஃப்லேம் செட் செய்து 20-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
மீன் அழகாக கிரிஸ்பாக வெந்து மேலே உள்ள சோறில் ப்லேவர்ஸ் எல்லாம் பரவி சூப்பராக இருக்கும்.
திறந்து மிக்ஸ் செய்து மீனுடன் தட்டில் எடுத்து விரும்பினால் அவித்த முட்டை, வறுத்த முந்திரி பாதாம் கிஸ்மிஸ் போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன்  பரிமாறவும்.

சுவையான பேக்ட் ஃபிஷ் மந்தி ரெடி .விரும்பினால் நீங்களும் செய்து பாருங்க.போன்லெஸ் ஃபிஷ் வைத்தும் செய்யலாம்.ஈசியாக செய்து விடலாம் ,பிரியாணி மணத்துடன் இருக்கும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.... செய்து பார்க்கிறோம்... நன்றி...