Wednesday, May 13, 2015

முட்டைக்கோஸ் பச்சைபட்டாணி பொரியல் / Cabbage green peas poriyal

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - கால் கிலோ 
உரித்த பச்சை பட்டாணி - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு,சீரகம் - தலா அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2இணுக்கு
நறுக்கிய மல்லி இலை - சிறிது
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால்  -டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கோஸ் நறுக்கி நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.

 ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம் சேர்க்கவும்,வெடிக்கும் பொழுது கருவேப்பிலை சேர்க்கவும்.
 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிரட்டி விடவும்.
 பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

 முட்டைக் கோஸ் சேர்த்து பிரட்டவும்.

 மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிரட்டி மூடி விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக விடவும்.

 வெந்தபின்பு தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
 பிரட்டவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.
 நன்கு பிரட்டி பரிமாறவும்.
சுவையான முட்டைக்கோஸ் பச்சை பட்டாணி பொரியல் ரெடி.

சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Combination Super...!

priyasaki said...

நல்லா இருக்கு பார்க்கவே. பொதுவா முட்டைக்கோஸ் ட்ரையா எனக்கு வராது.குழைந்துவிடும். ஏதாவது செய்து சமாளித்துவிடுவேன் உங்க முறையில் செய்துபார்க்கனும்.