Tuesday, May 12, 2015

கிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken


 தேவையான பொருட்கள்;
 ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5  கிலோ)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசாலா - 3 டேபிள்ஸ்பூன் (ஷான் டிக்கா மசாலா உபயோகித்து இருக்கேன்)  இல்லையெனில் சிக்கன் 65 மசாலா கூட தேவைக்கு உபயோகிக்கலாம்.
சிக்கன் சூப் கியூப் - 2 (விருப்பப்பட்டால்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2- 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பெரிய எலுமிச்சைப் பழம்
ஆரஞ்ச் ரெட் கலர் - பின்ச்
கசூரி மேத்தி - 2-3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
பட்டர் - சிறிதளவு - மேலே தடவுவதற்கு.
உப்பு - தேவைப்பட்டால்  சேர்க்கவும். ( சூப் கியூபில் உப்பு இருக்கும், மசாலாவிலும் உப்பு இருக்கும்)

செய்முறை:
சிக்கன் பீஸ் நன்றாக சுத்தம் செய்து அங்கங்கு கீறி விட்டுக் கொள்ளவும். மசாலா உள்ளே ஏறுவதற்கு வசதியாக இருக்கும்.

நான்கு முறை தாராளமாக தண்ணீர் வைத்து  நன்கு அலசிக் கொள்ளவும்.
பின்பு மஞ்சள் தூள் பிரட்டி ஐந்தாவதாக அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

முதலில் பொடித்த சூப் கியூப் சேர்த்து விரவி வைக்கவும்.சூப் கியூப் சேர்ப்பது உங்கள் விருப்பம் தான்.


பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் ,சிக்கன் டிக்கா மசாலா சேர்த்து விரவவும்.தயிர் நான் அதிகமாக சேர்க்க மாட்டேன்.சிக்கன் மாவு மாதிரி ஆகிவிடும்.
கசூரி மேத்தி சேர்க்கவும்.கலர் தேவைப்பட்டால் ஒரு பின்ச் ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து விரவவும்.
குறைந்தது நான்கு மணி நேரம் அல்லது ஒரு இரவு ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும்.
குக்கிங் ரேஞ்ச் அல்லது எலக்ட்ரிக் ஓவனில் 250 டிகிரி முற்சூடுபடுத்தவும். ப்லேம் மேலும் கீழும் செட் செய்யவும்.


( கொஞ்சமாக சிக்கன் என்றால் இப்படி கிரில் ட்ரேயில் வைத்து கிரில் செய்து எடுக்கலாம். ) மொத்தமாக நிறைய கிரில் செய்ய வேண்டும் என்றால் இப்படி கிரில் ப்லேட்டில் அடுக்கிவிடலாம்.

கீழ் ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் விரிக்கவும்.அதற்கு மேல் இருக்கும் கிரில்  ப்லேட்டில் சிக்கனை அடுக்கவும். அப்பொழுது தான் சிக்கனில் இருந்து வடியும் தண்ணீர் கீழே இருக்கும் அலுமினியம் ஃபாயில் விரித்த ட்ரேயில் விழும்.முடிந்தவுடன் அலுமினியம் ஃபாயில் மட்டும் எடுத்து விட்டால் போதும். ட்ரே சுத்தம் செய்வது சுலபம்.
ஒரு பக்கம் நன்கு சிவற வெந்தவுடன் அடுத்த பக்கம் கவனமாக திருப்பி வைக்கவும்.
இருபுறமும் வெந்தவுடன்  அடுப்பை அணைக்கவும். கவனமாக சிக்கன் பீஸ் மீது லேசாக பட்டர் தடவி எடுத்து வைக்கவும்.
சுவையான கிரில் சிக்கன்  ரெடி.


கிரில் சிக்கன் அடிக்கடி செய்றதுதான். ஒவ்வொரு முறையும் படம் எடுப்பது இல்லை.எனவே பழைய படம் ஒன்றை தான் பரிமாறலில் பகிர்ந்திருக்கேன். ஸ்டெப் பை ஸ்டெப் எல்லாம் அழகாக படம் எடுக்க முடியும். ஆனால் டிஷ் ரெடியான பின்பு அந்தக் கடைசி படம் தான் பொறுமையாக எனக்கு எடுக்க சிரமமாக இருக்கும். விருந்தினர்களை காக்க வைத்து விட்டு படம் எடுப்பது சங்கோஜமாக இருக்கும். அதனால் பரிமாறல் படம் எப்பவும் சுமாராகத்தான் இருக்கும்.அட்ஜஸ்ட் செய்துக்கோங்க.
பார்ட்டியில் சிக்கன் ஃப்ரைக்குப் பதில் இப்படி கிரில் செய்து வைத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.பிரியாணி ஃப்ரைட் ரைஸ்,கீ ரைஸ் ,குபூஸ்-ஹமூஸ்  உடன் பரிமாறலாம்.
நட்பு வட்டத்தில் ஈசியாக குக்கிங் ரேஞ்சில் எப்படி கிரில் சிக்கன் செய்றதுன்னு சிலர் கேட்டிருந்தாங்க,அவர்களுக்காக இந்த பகிர்வு.

No comments: