Sunday, May 17, 2015

இட்லி மாவு முட்டை குழிப்பணியாரம் / Idli Maavu Egg Kuzhipaniyaram



இட்லி மாவு மீதியானால் தோசை தான் சுடனுமா என்ன?  முட்டை சேர்த்து இந்த குழிப்பணியாரம் செய்து பாருங்க. இனிப்பு,  காரம் உங்க விருப்பம் தான்.

தேவையான பொருட்கள்;
இட்லி மாவு - ஒரு கப் 
முட்டை - 1 
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய மிளகாய் - 1
நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது
பொடித்த மிளகு,சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய்  - கொஞ்சம்  தேவைக்கு.
முட்டை பிரியப்பட்டால் ஒன்று அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


செய்முறை:


இட்லி மாவுடன் முட்டை நன்கு அடித்து சேர்த்துக் கொள்ளவும்.மேற் சொன்ன பொருட்கள் யாவும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.
மூடி போடவும். மாவு பெந்து வரும் பொழுது திருப்பி போடவும்.
வெளியே மொறு மொறுப்பாக உள்ளே சாஃப்டாக சூப்பர் இட்லிமாவு முட்டை குழிப்பணியாரம் ரெடி.
செய்து பாருங்க.அருமையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ்க்கு ஏத்த டிஷ். குழ்ந்தைகளுக்கு இனிப்பு சேர்த்து தேங்காய்த்துருவல் மட்டும் சேர்த்து செய்து கொடுக்கலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி...

Shamee S said...

பார்க்கவே அழகாக இருக்கு அக்கா.சுவைக்கு சொல்லவா வேணும்..
அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது குழிபணியாரக் கல் வாங்கணும் :))