Sunday, May 31, 2015

கேரள கூட்டுக்கறி / Kerala Kootukari


 தேவையான பொருட்கள்;
நறுக்கிய வாழைக்காய் - 1 கப்
நறுக்கிய சேனைக்கிழங்கு - 1 கப்
நறுக்கிய கேரட் & பீன்ஸ் - 1 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது கடலை பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை - 1 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு.
அரைக்க: 
தேங்காய் துருவல் - 3 - 4 டேபிள்ஸ்பூன் , சீரகம் 1 டீஸ்பூன் , இரண்டு பச்சை மிளகாய்.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு  & உ.பருப்பு - 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 3, பெருங்காயம் - கால் டீஸ்பூன்,கருவேப்பிலை
நறுக்கிய சின்ன வெங்காயம்  - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
 நறுக்கிய காய்கறிகள், தேவைக்கு தண்ணீர், மஜ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
 வெந்து வரும் பொழுது மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும்.நன்கு ஒரு  சேர பிரட்டி   விடவும்.
 வேகவைத்த கொண்டைக்கலை சேர்க்கவும்.
 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி மசித்து விடவும்.

 தாளிக்க கடாயில்  கடுகு உளௌத்தம் பருப்பு,வற்றல், கருவேப்பிலை,பெருங்காயம் தாளிக்கவும்.
 வெங்காயம் சேர்த்து நன்கு சிவற வதக்கவும்.
 வேக வைத்து மசித்த கூட்டுக்கறியில் சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி விடவும்.
 சுவையான சத்தான  கேரள கூட்டுக்கறி ரெடி. 
ஓணம் சத்யா,விஷூ விருந்தில் நிச்சயம் இடம் பெறும் இந்த அசத்தலான  கூட்டுக்கறி.பிடித்திருந்தால் செய்து பாருங்க.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தலான கூட்டுக்கறி...

ADHI VENKAT said...

பார்க்கவே சூப்பரா இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

Shamee S said...

கேரள கூட்டுக்கறி பார்த்தாலே நாவூறுது..அவசியம் செய்து பார்க்கிறேன்...

Asiya Omar said...

தனபாலன் சார், ஆதி, ஷமீ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.