Saturday, May 9, 2015

முருங்கைக்கீரை அடை தோசை / Moringa leaves adai dosai

தேவையான பொருட்கள்;
ஊற வைக்க:
( புழுங்கலரிசி - 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4)
பெருங்காயம் - அரைடீஸ்பூன் அல்லது ஒரு துண்டு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
முருங்கைக்கீரை - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் அல்லது பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
எண்ணெய் தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை நன்கு அலசி  குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.அத்துடன் மிளகாய் வற்றல்,சீரகம்,பெருங்காயம் சேர்க்கவும்.


ஊறிய பின்பு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு திக்காக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் தேவைக்கு உப்பு,மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்  சேர்த்து கலந்து வைக்கவும்.
கீரை வதக்க ஒரு வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
முருங்கைக்கீரை சேர்க்கவும்.நன்கு வதங்கியவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
அரைத்த அடை மாவில் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும். தோசை பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தவாவை சூடாக்கவும், மீடியம் நெருப்பில் அடை மாவை தவாவில் விட்டு பரத்தி விடவும்.மூடி போடவும்.. லேசாக வெந்து வரும் பொழுது சிறிது எண்ணெய் தெளிக்கவும்.
அடையை திருப்பி போடவும். இருபுறமும் சிவற வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான சத்தான முருங்கைக்கீரை அடை  தோசை ரெடி. அப்படியே சாப்பிடலாம், இல்லாவிடில் தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள குறிப்பு... நன்றி...

priyasaki said...

எனக்கு முருங்கை கீரை ரெம்ப பிடித்தமானது.இங்கு கிடைப்பது கஷ்டம். கிடைத்தால் அடைதான். நன்றிஆசியா.