Sunday, May 3, 2015

பனீர் வெஜ் கட்லெட் / Paneer Veg Cutlet


தேவையான பொருட்கள்;
பனீர் - 200 - 250  கிராம் ( உதிர்த்து அல்லது துருவிக் கொள்ளவும்)
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய்  -2  
பொடியாக நறுக்கிய கேரட்,பீன்ஸ், பச்சை பட்டாணி வேக வைத்தது - அரை கப்  அல்லது சிறிது கூடுதலாக.
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள்,மிளகு,சீரகம்,சோம்பு தூள்கள் - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
ஃப்ரெஷ் ப்ரெட் - 2 பெரிய ஸ்லைஸ் (துண்டாக்கி மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்.) ப்ரெட் சேர்க்கப் பிரியப் படாதவர்கள் 200 கிராம் உருளைக்கிழங்கு வேக வைத்து சேர்க்கலாம்.
உப்பு - சுவைக்கு.
ப்ரெட்  கிரெம்ஸ் - 1 கப்
மைதா 2 டேபிள்ஸ்பூன் அரைகப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
எண்ணெய்  - தேவைக்கு.
செய்முறை:


கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு சேர்க்கவும்.வதக்கி பச்சை மிளகாய் சேர்க்கவும் நல்ல பிரட்டி விட்டு ஆற வைக்கவும்..
ஒரு கடாயில் உதிர்த்த பனீரை 2 டீஸ்பூன்  எண்ணெயில் எல்லா மசாலாவும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஆற வைக்கவும்.
   

அதனை ஒரு பவுலில் எடுக்கவும். அத்துடன்  வதக்கிய வெங்காயம், வேக வைத்த காய்கறிகள், நறுக்கிய மல்லி இலை,உதிர்த்த ப்ரெட் ,தேவைக்கு உப்பு  சேர்த்து நன்கு பிசையவும்.நான் இங்கு உருளைக்கிழங்கிற்கு பதில் ப்ரெட் சேர்த்துள்ளேன்.

உருண்டைகளாக பிடிக்கவும்.
உருண்டைகலை மைதா கரைசலில் முக்கி எடுக்கவும்.
பிரெட் கிரெம்ஸில் பிரட்டி  நன்கு உருண்டைகளை அழுத்திப் பிடித்து , விரும்பிய வடிவத்தில் ஓவல் அல்லது வட்டம் அல்லது இதய வடிவில் பிடித்து வைக்கவும்.

அரை மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும்.
மிதமான சூட்டில் கட்லெட்டை பொன்னிறமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 சுவையான பனீர் வெஜ் கட்லெட் ரெடி.சும்மா சாஸ் தொட்டும் சாப்பிடலாம். அல்லது  ஸ்டார்ட்டராகவும் பரிமாறலாம்.




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாக செய்துள்ளீர்கள்... நன்றி...

priyasaki said...

பனீர் ரெசிப்பி என்றா மிகவும் பிடிக்கும். இந்த கட்லெட் வித்தியாசமா இருக்கு ஆசியா. நன்றாக இருக்கு பார்க்கவே. நன்றி ஆசியா.