Monday, June 8, 2015

வெண்டைக்காய் இஞ்சி வறுவல் / Bhindi Ginger Fry


வித்தியாசமாக இருந்தது இந்த ரெசிப்பி, ஃபேஸ் புக் நெல்லை ஃபுட் கைட்  பகிர்வில்    போஜனா ரெசிப்பி   பார்த்து செய்தேன். நல்லாயிருந்தது. நன்றி திருமதி சுபாஷிணி.
தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - அரைக் கிலோ
ஃப்ரெஷ் கெட்டித் தயிர்  - 1 கப்
இஞ்சி - 20 கிராம்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கடலை மாவு , கார்ன் மாவு - தலா 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு.
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:
வெண்டைக்காயை கழுவி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி,பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் எண்ணெய் தவிர மேற் சொன்ன பொருட்கள் அனைத்தும்  வெண்டைக்காயுடன் சேர்க்கவும்.அரைத்த இஞ்சி,மிளகாய் சீரகம்  விழுதையும் சேர்க்கவும்.


 கையால் நன்கு கலந்து வைக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டும். வெண்டைக்காயில் மசாலா எல்லாம் ஒட்டியிருக்க வேண்டும். உப்பு சரி பார்க்கவும்.
 வாணலியில் எண்ணெய் தேவைக்கு காயவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடித்து எடுத்து  கிச்சன் டிஸ்யூவில் வைத்து பின்பு பரிமாறவும்.

 சுவையான வெண்டைக்காய் இஞ்சி வறுவல் ரெடி.
காரம் அவரவர் விருப்பம். பிடித்திருந்தால் செய்து பாருங்க.பக்குவமாக செய்ய வேண்டும்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை ஆசியா.

Asiya Omar said...

நன்றி, ராமலஷ்மி.

வெங்கட் நாகராஜ் said...

புது விதமாய் இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாகச் செய்துள்ளீர்கள்... நன்றி...