Sunday, June 7, 2015

சுரைக்காய் கொத்து பருப்பு / Bottle gourd Dal

 தேவையான பொருட்கள்;
நறுக்கிய சுரைக்காய் - 3 கப்
பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி சிறியது - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
தாளிக்க :
எண்ணெய் நெய் கலவை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1டீஸ்ஊன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் நருக்கியது - கொஞ்சம்.
செய்முறை:
பருப்பை கழைந்து  சிறிது நேரம் ஊற விடவும்.குக்கரில் பருப்பு  சேர்த்து முங்கும் அளவு தண்ணீர் வைக்கவும். மஞ்சள் தூள் போடவும். கொதிக்கட்டும்.
சின்ன வெங்காயம்  5 எண்ணம் ,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

 கொதிக்கும் பொழுது நறுக்கிய சுரைக்காய் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்
 மூடி 2  விசில் வரட்டும்.
 ஆவியடங்கியவுடன் திறக்கவும். .
 கலந்து விடவும்.பருப்பு கொத்து கொத்தாக வெந்து இருக்கும்.
 தாளித்து கொட்டவும்.தாளிப்பு லேசாக சிவற வேண்டும்.
 வேக வைத்த சுரைக்காய் பருப்பு சேர்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
 சூடாய் சாதம் வகையறாக்களுடன் பரிமாறவும்.

 சுரைக்காய் விதம் விதமாய் சமைப்பேன். பருப்பு சேர்த்தே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதம். இதனை சாம்பார் பொடி சேர்த்தும் செய்யலாம், குழம்பு மசாலா சேர்த்தும் செய்யலாம்.எப்படி செய்தாலும் சுரைக்காய் ருசிக்கும்.


5 comments:

Chitra said...

Aroma of Nellai cuisine

Asiya Omar said...

Thanks chitra. ungalai blog pakkam paarththu evvalavu naal aachu? :) !

Jaleela Kamal said...

பார்க்கவே அருமையாக இருக்கு/ வெஜ் தாளி அசத்தலாக இருக்கு
எங்க வீட்டிலும் நேற்று சுரைக்காய் தான் சுரைக்காய் இறால்.

yathavan nambi said...


அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி ஆசியா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (16.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 16ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/16.html