Tuesday, June 2, 2015

தக்காளிப் பச்சடி / Tomato Pachadi

  தேவையான பொருட்கள்;
தக்காளி - 5 பெரியது அல்லது அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - 1 அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3  நீள வாக்கில் நறுக்கியது
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
வேக வைத்த துவரம் பருப்பு - 2 -3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2  - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
தாளிக்க:
நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:
தாளிக்க சொன்ன பொருட்களை சேர்த்து ஒரு வாணலியில் தாளிக்கவும்.

  நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்.மூடி போட்டு நன்கு மசிய விடவும். மஞ்சள் பொடி,சாம்பார் பொடி சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.
 வேக வைத்த பருப்பு சேர்க்கவும். கலந்து விடவும்.
 தேங்காய்த்துருவல் சேர்க்கவும். மிளகாயை கீறி போடாமல் தேங்காயுடன் 2 எண்ணம் மிளகாய் சேர்த்து பர பரவென்று  அரைத்தும் சேர்க்கலாம். உப்பு சரிபார்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.சிம்மில் ஒரு நிமிடம் வைக்கவும்.
 நறுக்கிய மல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
 சுவையான தக்காளிப் பச்சடி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி,இட்லி,தோசை இவற்றுடன் பரிமாறலாம்.



3 comments:

வெங்கட் நாகராஜ் said...

புதியதோர் குறிப்பிற்கு நன்றி.

Mahi said...

Adding paruppu in this is nu..looks good Akka!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...