Sunday, July 19, 2015

கோழி ரசம் / Chicken Rasam

தேவையான பொருட்கள்;

முதலில் குக்கரில் வேக வைக்க:
கோழி எலும்புடன் கூடிய துண்டுகள் - 100 கிராம்
பெரிய தக்காளி - 1
சின்ன வெங்காயம்  சிறிது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
புளி தேவைக்கு சிறிது அளவு  ஊற வைக்கவும்.
ரசப் பொடிக்கு:


மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம்  - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1டீஸ்பூன்
முழு மல்லி - 1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உங்க ருசிக்கு தக்க பொருட்களை கூட்டிக் கொள்ளலாம். இது தான் நான் சேர்க்கும் அளவு.
வறுத்துப் பொடிக்கவும்.அத்துடன்
தட்டிக் கொள்ள:
பூண்டு -  4  பெரிய  பல்
சின்ன வெங்காயம் - 4
தாளிக்க:
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உ.பருப்பு ,வெந்தயம் - சிறிது
வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு
பெருங்காயம் - கால் டீஸ்பூன்.
அலங்கரிக்க:
நறுக்கிய மல்லி இலை.

செய்முறை:

 முதலில் சுத்தம் செய்து நன்கு அலசிய எலும்புடன் கூடிய கோழித்துண்டுகளை குக்கரில் மேற் சொன்னவாறு பொருட்களுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில் விட்டு  வேகவைத்து எடுக்கவும்.
 தாளிக்க சொன்னவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  வெந்த கோழியை  அதில் உள்ள சூப்புடன் தாளித்த பாத்திரத்தில் சேர்க்கவும்.

தயார் செய்த ரசப்பொடி சேர்க்கவும்.கொதிக்க விடவும்.
 தேவைக்கு புளித்தண்ணீர் சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
 நுரை கூடி வரும்.

நறுக்கிய மல்லியிலை அலங்கரித்து சூடான சோற்றுடன் பரிமாறவும்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சூப்பர்...!

பரிவை சே.குமார் said...

நானும் அடிக்கடி வைப்பேன்... ஆனால் வெந்தயத்தை வறுத்துப் பொடிப்பதெல்லாம் இல்லை... அப்படியேதான் போடுவதுண்டு... இந்த முறையில் செய்து பார்க்கணும் அக்கா...

Jaleela Kamal said...

கோழி ரசம் சுட சுட வெரும் சாதத்துக்கு சாப்பிட அருமையாக இருக்குமே , படத்தில் சுடுசாதம் , கோழி ரசம் , சிக்கன் கறி, பருப்பு கீரையுடன் பார்க்க இப்பவே சாப்பிடனும் போல இருக்கும்

Asiya Omar said...

சகோ.பரிவை.சே.குமார் ,வெந்தயத்தை நாங்களும் வறுத்துப் பொடிப்பதில்லையே ! மீண்டும் குறிப்பை பார்க்கவும்.கருத்திற்கு நன்றி.