Thursday, August 6, 2015

பூசணி மோர் குழம்பு / மோர் கூட்டு / மோர் கறி / Ash gourd Moor kuzhambu / Moor kootu / Moor curry


 தேவையான பொருட்கள்;
வேக வைக்க:
நறுக்கிய வெள்ளை பூசணி -  1கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - அரை டீஸ்பூன்.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - பின்ச்
மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 1இணுக்கு.

கடைசியில் சேர்க்க கெட்டி தயிர் - ஒரு கப்.

செய்முறை:
பூசணி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

 தேங்காய் சீரகம்,பச்சை மிளகாய் அரைத்து எடுக்கவும்.
 வெந்து வரும் பூசணியில் சேர்க்கவும்.
தேங்காய் அரவை  நன்கு கொதித்து கெட்டியாக வரும்.அடுப்பை அணைக்கவும்.
 தாளித்து கொட்டவும் அல்லது ஆறிய பின்பு தயிர் சேர்த்து விட்டும் தாளித்து கொள்ளலாம்.
கடைசியில்  நன்கு அடித்த கெட்டி தயிர் சேர்க்கவும். கலந்து விடவும்.
 சுவையான பூசணி மோர் குழம்பு/ கூட்டு/ கறி தயார்.
சூடான சாதம் ,சாப்பாத்தியுடன் பரிமாற சூப்பர்.



1 comment:

பரிவை சே.குமார் said...

படங்களுடன் விளக்கமாய்... அருமை அக்கா...