Saturday, August 15, 2015

எண்ணெய் கத்திரிக்காய் / பிரியாணி கத்திரிக்காய் / Biriyani Brinjal

பிரியாணிக்கு பக்க உணவாக நிச்சயம் கத்திரிக்காய்  செய்வது வழக்கம். எண்ணெய் கத்திரிக்காயை நான் பலவிதமாக முயற்சித்து பார்ப்பேன். இந்த முறை செய்யும் பொழுது இப்படிச் செய்தேன். குறிப்பு உங்களுக்காக.

தேவையான பொருட்கள்;
பிஞ்சு வயலட் கத்திரிக்காய் - அரைக்கிலோ
நல்ல எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில் - 100 மில்லி (அல்லது தேவைக்கு)
கடுகு,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய பூண்டு பல் பெரியது - 6
அரைத்த மீடியம் சைஸ் தக்காளி - 1
மல்லி கருவேப்பிலை - சிறிது.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் அல்லது சீனி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

வறுத்துப் பொடிக்க:
மிளகாய் வற்றல் - 5
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் ,சோம்பு - தலா அரைடீஸ்பூன்
மிளகு,வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
எள்ளு - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
சிறிது எண்ணெய் விட்டு வறுத்து ஆற விட்டுப் பொடிக்கவும்.

செய்முறை:
கத்திரிக்காயை நன்கு அலசி காம்பு நீக்கி தொடுப்பு வைத்து நான்காக கீறிக் கொள்ளவும். புளி கரைத்து வைக்கவும். மேற்கூறியதை வறுத்துப் பொடித்து தயார் செய்து கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விடவும். சூடானவுடன் கடுகு,உ.பருப்பு போட்டுபொரியவிடவும்,கருவேப்பிலை சேர்க்கவும். வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் சேர்க்கவும்.
சிறிது உப்பு தூவி மூடி போட்டு வேக வைக்கவும்.

வெந்து வரும் பொழுது அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.
தக்காளி விழுது ஒன்று சேர்ந்து கொதித்து வரும்.புளிக்கரைசல் விடவும்.
புளி பார்த்து சேர்க்கவும். புளி அதிகமாகிவிட்டால் சுவை எடுபடாது.
வறுத்துப் பொடித்ததை சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்.
நன்கு பிரட்டி சிறிது நேரம் மூடி போடவும்.கெட்டியாகி வரும். ருசிக்கு சிறிது பொடித்த வெல்லம் அல்லது சீனி சேர்க்கலாம்.
நறுக்கிய மல்லி சேர்க்கவும்.
பிரட்டி விடவும்.
ஒரு பவுலில் எடுத்து பரிமாறவும்.
சுவையான பிரியாணி கத்திரிக்காய் ரெடி.
பிரியாணி வகையறாவுடன் பரிமாறலாம்.

ஒரு சிலருக்கு தால்ச்சா தான் பிடிக்கும். விரும்பினால் கொஞ்சம் தால்ச்சாவும் செய்து உடன் பரிமாறலாம்.:) !

இது சுலபமாக செய்த எண்ணெய் கத்திரிக்காய்.
ஸ்டஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பிற்கு இங்கு கிளிக்கவும்.
கத்திரிக்காய் குறிப்புகளுக்கு சைட் பாரில் இருக்கும் கத்திரிக்காயை கிளிக்கவும். இருபதிற்கும் மேற்பட்ட குறிப்புகள் இருக்கிறது.

7 comments:

Farin Ahmed said...

Yummy brinjal curry..perfect with biryani

மனோ சாமிநாதன் said...

விளக்கப்படங்களும் குறிப்பும் அருமை ஆசியா!

Radha Venkat said...

Today i make this one .The taste was awesome.......

Radha Venkat said...

நீண்ட நாள் ஆசை எண்ணெய் கத்திரிக்காய் சமைக்க வேண்டும் என்று,இன்று உங்கள் குறிப்பை பார்த்து செய்தேன் .சுவை அருமையாக இருந்தது.கணவரிடம் பாராட்டு மழை தான் .ரொம்ப நன்றி .

athira said...

மிக அருமை..

anand jesy said...

Realy good

Unknown said...

மிக மிக அறுமை வாழ்துக்கள்