Wednesday, August 12, 2015

பச்சை மிளகாய் சிக்கன் / Green chilli chicken ( Indo- chinese)



இந்த கிரீன் சில்லி சிக்கனை நான் ஒவ்வொரு முறையும் ஒரு மாதிரி செய்வேன். என் இரண்டு  வலைப்பூவிலும் இதனை சிறு சிறு மாற்றத்துடன்  முன்பே பகிர்ந்துள்ளேன். இந்த முறை செய்த பொழுது அதன் செய்முறை:

அரைக்க:
பச்சை மிளகாய் - 12 -15 (காரம் அவரவர் விருப்பம்) + உப்பு தேவைக்கு.
தேவையான பொருட்கள்;
சிக்கன் துண்டுகள் - ஒரு கிலோ
எண்ணெய் - 4-5 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
சோயா சாஸ் - 1-2 டேபிள்ஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
அஜினமோட்டோ - கால் டீஸ்பூன் 
கார்ன்ஃப்லோர் 4 டீஸ்பூன் (ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து நான்கைந்து முறை தண்ணீர் வைத்து  அலசி வடித்து வைக்கவும்.
பச்சை மிளகாயை தேவைக்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விடவும். காய்ந்தவுடன் மிளகாய் வற்றல் சேர்க்கவும். அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும். சிம்மில் வைத்து வதக்கவும்.
சுத்தம் செய்த சிக்கன் சேர்க்கவும்.
பிரட்டி விடவும். சிக்கனிலேயே தண்ணீர் ஊறும். மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும்.தேவைக்கு உப்பு பார்த்து சேர்க்கவும்.


திறந்து அஜினமோட்டோ சோயா சாஸ் சேர்க்கவும். பிரட்டி விடவும்.சிறிது நேரம் மூடி திரும்பவும் சிம்மில் வேக விடவும். 

திறந்து கிரீன் சில்லி சாஸ் சேர்க்கவும். கார்ன் ஃப்லோர் கரைசலை விடவும். அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டவும். கிரீன் சில்லி சிக்கன் ஒன்று சேர்ந்து பிரட்டியது போல் வரும். எண்ணெய் தெளிந்து வரும். அடுப்பை அணைக்கவும்.
 சுவையான கிரீன் சில்லி சிக்கன் ரெடி 

இதனை ப்லைன் ரைஸ், சப்பாத்தி,பரோட்டா, நாண், பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.




1 comment:

Farin Ahmed said...

Yummy green chilly chicken, apdiyae andha dining table LA utkaarndhu saapita sooper ah irrukum