Monday, August 3, 2015

சுலப கார சட்னி / Quick Spicy Chutney


சுள்ளுன்னு காரசட்னி இருந்தால் தான் ஒரு சிலருக்கு இட்லியோ தோசையோ சாப்பிட பிடிக்கும்.அப்படி விரும்புகிறவங்களுக்கு இப்படி சட்னி செய்து கொடுங்க. செமையாக இருக்கும்.


தேவையான பொருட்கள்;
சின்ன வெங்காயம் - 8-10
பூண்டு - 2 அல்லது 3 பல்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
நாட்டு தக்காளி - 1
உப்பு - தேவைக்கு
வதக்க - நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் - புளி கொட்டையளவு .


செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் மேற் சொன்ன பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.நான் புளி சேர்க்கவில்லை.
ஆறிய பின்பு மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
சுலபமாகச் செய்யக் கூடிய கார சட்னி ரெடி..
தாளிக்க தேவையில்லை. எண்ணெயில் வதக்கி அரைப்பதால்,
விரும்பினால் கடுகு கருவேப்பிலை தாளித்து கொள்ளலாம்.
இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
இரண்டு பேருக்கு இந்த அளவு சரியாக இருக்கும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சகோதரி...

கோமதி அரசு said...

அருமையான ருசியான சுலப காரசட்னி.