Monday, September 28, 2015

அரைக்கீரை கடைசல் / Araikeerai / Amaranthus kadaisal



 தேவையான பொருட்கள்;
வேக வைக்க:
அரைக்கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பற்கள்
தக்காளி - 1
கீரிய பச்சை மிளகாய் -2-  3
பெருங்காயம் - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
மற்றும் தேவைக்கு உப்பு.
விரும்பினால் சிறிது புளி சேர்க்கலாம்.

தாளிக்க :
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் - 2


 அரைக்கீரையை ஆய்ந்து நன்கு மண் போக அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

கீரையை வேக வைக்க அரிசி கழனி ஒரு கப் சேர்க்கலாம்.
 மேற் சொன்ன பொருட்களை சேர்த்து வேக வைக்கவும்.



 வெந்த பின்பு ஆற விட்டு சுவைக்கு உப்பு ,புளி சேர்த்து மத்தால் கடையலாம்.அல்லது மிக்ஸியில் ப்லெண்ட் செய்து எடுக்கலாம்.


தாளித்து கொட்டவும்.

சுவையான சத்தான அரைக்கீரை கடைசல் ரெடி.
இப்படி தனியாக கடைய பிடிக்காதவர்கள் சிறிது வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கடையலாம்.



2 comments:

பரிவை சே.குமார் said...

கீரை கடைசல் படங்களுடன் விளக்கமாய்...
செய்து பார்க்கணும் அக்கா...

Jaleela Kamal said...

கீரை க்டைசல் பச்சபசேலுன்னு சூப்பராக இருக்கு
எனக்கு கீரினி ஃபுட் தான் ரொம்ப பிடிக்கும்.