Friday, September 18, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு 27- திருமதி ஃபரின் அஹமது - மைக்ரோவேவ் பேசன் லட்டு / Guest Post /Microwave Besan Ladoo

இந்த வார சிறப்பு விருந்தினர் திருமதி.ஃபரின் அஹமது. வித்தியாசமான சிந்தனையுள்ளவர்.எனக்கு பிடித்த சமையல் வலைப்பூ கலைஞர். இவர் ஒரு சமயம் பிற்காலத்தில் சினிமாவிற்கு வசனகர்த்தாவாகலாம்.திறமை மிக்க படைப்பாளி.
வலைப்பூவை சென்று பாருங்கள்.வெளிவரவே மனசு வராது.அவ்வளவு தான்! நீங்களே சொல்வீங்க அப்புறம்.
அவருடைய ப்ரஃபைல் படமாக செல்லமகளின் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார். நல்வாழ்த்துக்கள். 
சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து ஆசியாவின் சமைத்து அசத்தலாமை கௌரவப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.


நான் தான் பொதுவாக சிறப்பு விருந்தினர் பற்றி எழுதும் வழக்கம், ஆனால் இவரைப் பாருங்கள், என்னைப்பற்றி சிறப்பாக எழுதி அனுப்பியிருக்கிறார்.
About my sweet Asiya akka:

அமைதிக்கு பெயர் தான் ஆசியா என்று எல்லோருக்கும் தெரியும் . அப்படிப்பட்ட ஒரு experienced blogger என்னை guest post பண்ணுங்கனு சொல்லும்பொது  நான் அப்பிடியே shock ஆயிட்டேன் . எனக்கு கஜினி மாதிரி short -term memory loss அது தான் ரொம்பவே late ah அனுபிட்டேன். Sorry அக்கா for the delay .

​​
நான் முதல்முதலா தமிழ் வலைபூ  -nu follow பண்ணுனது நம்ம ஆசியா அக்கா வலைபூ  தான் . கிட்ட தட்ட 5 ஆண்டுகளாக அவுங்களோட மிக பெரிய Fan, Usha Fan-a விட பயங்கரமான ரசிகை. அவுங்க blog ல இல்லாத ரேசிபேயே இல்ல. அவ்வளவு Variety of recipes பார்க்கலாம். Especially Queen of Grilling-னு சொல்லலாம் .

அக்காவை பற்றி சொல்லனும்னா சொல்லிகொண்டே போகலாம் . ரொம்ப ரொம்ப மரியாதையா பேசுவாங்க . நீங்க வாங்க போங்கனு ஒரு மரியாதை கலந்த நட்பு. நாங்க தான் இப்போ NEW நண்பேண்டா.
என்ன மாதிரி recipe வேண்டும்னு கேட்கும் பொது அக்கா டக்-னு செய்ற மாதிரினு recipe அனுப்புங்க சொன்னாங்க , அக்கா இந்த டக் Okay va...

அந்த டக் recipe-ya டக் டக்னு சொல்லற அந்த அப்படக்கர் யாரு தெரியுமா ..நான் தான் உங்க டக்கரான Farin ...கொஞ்சம் என்னை பற்றி டக்னு ....

என்னைபற்றி சொல்லுற அளவுக்கு நான் அவ்வளோ பெரிய அப்பாடக்கர் இல்லை ...

ஏதோ கொஞ்ச வருஷமா வளர்ந்துகிட்டே இருக்கும் ஒரு டைரக்டர் .என்னோட ஓடுற படம், ஓடாத படம், மொக்க படம், காமெடி படம் என்று அணைத்து படத்தினை டக்னு என்னோட  இயக்கத்துல பார்க்கலாம்.

நான் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய Queen (டக்னு சொல்லிராதீங்க அடிச்சுகூட கேட்பாங்க அப்பவும் சொல்லாதீங்க ). திருமணமாகி ஒரு Royal baby girl இருக்கா, சரியான சுட்டி . கணவன் நல்லவர் , வல்லவர் அவர் குடுத்த காசுக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் . பெற்றோர் and சகோதரர்கள் இந்தியா + அமெரிக்காவில்  இருக்கீறார்கள்.

அவ்வளவு தான் என்னை பற்றி சொல்ல .. நான் யார் நான் யார் என்ற கேள்விக்கு பதில் இன்னும் தேடி கொண்டே இருகிறேன் . கண்டுபிடித்த உடன் டக்-நு சொல்லுறேன் ....

நம்ம இப்போ அந்த டக் recipe-ya பார்க்கலாமா......


Microwave Besan Ladoo:

Kadalai maavu- ¼ cup

Powder sugar -1/2 cup

Ghee- 3 tbsp + 1 tsp

Cardomom powder-1/4 tsp


Method:

In a microwave safe bowl, add 3 tbsp ghee follwed by the kadalai maavu. Mix it well and microwave for 2 mins.


Remove it and mix it again. Now add the powder sugar, cardamom powder mix it well

Mix it well, add the remaining 1 tsp of ghee in your hand and form ladoos.


இந்த டக் recipe உங்களுக்கு பிடிச்சுருகும்னு நினைகிறேன் ...Bye bye ...

எல்லாம் சரி தான். ஃபரின் நான் அமைதியா? அதெல்லாம் வலையுலகில்.வீட்டில் கேட்டால் சொல்வார்கள் என் அட்டகாசம் பற்றி.நல்லதொரு குவிக் ரெசிப்பி.விரைவில் செய்து பார்ப்பேன்.
மீண்டும் மிக்க மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி ஃபரின் அஹமது.
சிறப்பு விருந்தினர் பகுதியில் கலந்து கொள்ள விபரத்திற்கு இங்கு கிளிக்கவும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

2 comments:

Srividhya said...

Sema sema sema.. Tamil la type pana mudila so thanglish la panaren. Mannikavum.

Jaleela Kamal said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவர் பரீன், அவங்க ரெசிபிக்கு வைக்கிற பெயரை பார்க்கவே அவங்க பிளாக்குக்கு அடிக்கடி போவேன், சூப்பரான லட்டு கட்சிதமாக இருக்கும்
இருவருக்கும் வாழ்த்துக்கள்