Tuesday, September 29, 2015

கலவை மீன் குழம்பு / Variety fish curry


பல விதமாக மீன் குழம்பு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன். இந்த முறை சிறிய மாற்றத்துடன் செய்த பொழுது கிளிக்கியது. மீன் நிறைய வாங்கினால் மீன்காரம்மா ஓசிக்கு தன் கூடையில் இருக்கும் எல்லா மீனிலும் சிறிய சைஸ் மீனை எல்லாம் போட்டு குழம்பு வையுங்கன்னு தருவாங்க.
அப்படி தந்த பொழுது வெரைட்டியாக மீன்கள் சேர்த்து செய்த குழம்பு.செம டேஸ்ட்.
மீனை சுத்தம் செய்து துண்டு போட்டு நன்கு வாடை போக அலசிக் கொள்ளவும்.உப்பு மஞ்சள் தூள் போட்டு விரவி மீண்டும் அலசவும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
அரைக்கிலோ மீனிற்கு இரண்டு தக்காளி மிக்ஸி ஜாரில்  சுற்றி வைக்கவும்.நூறு கிராம் சின்ன வெங்காயம், ஒரு 6 பல்லு பூண்டு சேர்த்து அதையும் தனியாக பரபரன்னு சுற்றி வைக்கவும். எலுமிச்சை அளவு புளி கரைத்து வைக்கவும்.பச்சை மிளகாய் 2 கீரி வைக்கவும்.மல்லி கருவேப்பிலை , தேங்காய் அரைத்த விழுது அரை கப் ரெடி செய்து கொள்ளவும்.

ஒரு மண் சட்டியில் நல்ல எண்ணெய் 3- 4 டேபிள்ஸ்பூன் விடவும். எண்ணெய் சூடானவுடன் சிறிது  கடுகு,வெந்தயம்,உளுத்தம் பருப்பு சேர்க்கவும். எல்லாம் பொரிந்து வரும்பொழுது கருவேப்பிலை சேர்க்கவும்.
தட்டிய,வெங்காயம் பூண்டு, கீரிய மிளகாய் சேர்க்கவும்.நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.சிம்மில் வைத்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

காரத்திற்கு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், மீன் மசாலா 2டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.புளித்தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதித்து பச்சை வாடை அடங்கியவுடன்  மீன் சேர்க்கவும்.

எல்லா மீனும்கலந்து போடுவதால் சுவை பிரமாதமாக இருக்கும்.எப்படி எல்லாக்காயும் சேர்த்து சாம்பார் செய்தால் ருசிக்குமோ அது போல் தான்.

 
மீன் வெந்து வரும் பொழுது அரைத்த தேங்காய் விட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் அடுப்பை அணைக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.இந்த முறையில் செய்தால் மீன் குழம்பு செமையாக இருக்கும்.தேங்காய் விரும்பினால் மட்டும் சேர்க்கவும்.
சுவையான கலவை மீன் குழம்பு ரெடி.
விதம் விதமான எழுபதிற்கும் மேற்பட்ட மீன் குறிப்புகளுக்கு சைட்  பாரில் இருக்கும் மீன் தலைப்பை கிளிக்கிப் பார்க்கவும்.

4 comments:

Radha Rani said...

மண் சட்டியில் செய்வதால் இன்னும் மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும் ஆசியா.. படத்தை பார்த்த வுடன் ரொம்ப வாய் ஊறுது ..:)

Jaleela Kamal said...

மண்சட்டியில் அதுவும் கலவை மீன் நாவூருகிறது

Shamee S said...

கலவை மீன் குழம்பு செம ருசி அக்கா...
உங்கள் முறையில் ஒரு முறை முயற்சிக்கிறேன்.

Saratha J said...

ஆசியா நலமா? இன்று வஞ்சீரம் மீனும், சாளை மீனும் கலந்து உங்கள் செய்முறைப்படி செய்தேன். நன்றாக இருந்தது. தொடருங்கள்.