Saturday, October 31, 2015

ஜிஞ்சர் சில்லி சிக்கன் விங்ஸ்/ Ginger chilli chicken wings



தேவையான பொருட்கள்;
ஊற வைக்க :
ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் - 1 கிலோ
கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 -2  டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
உப்பு சிறிது.
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 6 (காரத்திற்கு) மல்லி இலை  ஒரு கையளவு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பொரிக்க:
எண்ணெய் - 4-5 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன் அல்லது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்(உங்கள் விருப்பம்)
அஜினோமோட்டோ - விரும்பினால் சிறிது.(நான் சேர்க்கவில்லை).
மேலே தூவ மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
அலங்கரிக்க : நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன்.



சிக்கன் விங்ஸ் சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீரே இல்லாதபடி வடித்து வைக்கவும்.
பின் பு அத்துடன்  கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 -2  டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்,சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு 1 மணி நேரம் ஊற விடவும்.


பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப ) மல்லி இலை  ஒரு கையளவு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு அகலமான நான்ஸ்டிக் சேலோ ஃப்ரை பேனில் எண்ணெய் விடவும். ஊறிய சிக்கனை பரத்தி போடவும்.
எண்ணெய் சூடானவுடன் ஊறிய சிக்கன் விங்ஸ் சேர்த்து இருபுறமும் திருப்பி பொரிய விடவும். நான்ஸ்டில் ஃப்ரை பேனில் தான் இந்த ரெசிப்பி செய்ய வேண்டும்.
சிக்கன் ஃப்ரை ஆனவுடன் நறுக்கிய அல்லது கொரகொரப்பாக அரைத்த இஞ்சி பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.
அத்துடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.பிரட்டி உப்பு சரிபார்க்கவும்.தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
பிரட்டி விட்டு மூடி வேக விடவும். பச்சை வாடை போய் சுருண்டு வர வேண்டும்.மிளகுத்தூள் சேர்க்கவும்.
ஒரு சேர பிரட்டி விடவும்.சிக்கன் விங்ஸ் துண்டுகள் தனித் தனியாக  எடுக்குமாறு நாம் சேர்த்த பொருட்கள் அதனில் ஒட்டி இருக்க வேண்டும். எண்ணெய் வடித்து விட்டு சிக்கனை எடுக்க வேண்டும்.
நான் எடுத்த பரிமாறிய படம் சரியாக வரவில்லை.
ஸ்டார்டராக அல்லது லஞ்ச் அல்லது டின்னருக்கு சைட் டிஷாக செய்து அசத்தலாம்.
டேஸ்ட் சூப்பர்னு எல்லாரும் சொன்னாங்க. சிக்கனில் நான் விதம் விதமாக முயற்சி செய்வேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்து பாருங்க.

No comments: