Sunday, October 11, 2015

நெல்லை நெய்ச் சோறு / Nellai Ney Choru



 தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அரிசி - 1 கிலோ (விரும்பினால் இத்துடன் வாசனை சம்பாவும் கலந்து ஆக்கலாம்)
நறுக்கிய  வெங்காயம் - 2
நறுக்கிய  தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய மல்லி,புதினா - சிறிது
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலம்,பட்டை,கிராம்பு  தூள் - அரை டீஸ்பூன் அல்லது முழுசாகவும் போடலாம்.
தயிர் - 150- 200 மில்லி
எலுமிச்சை - சிறியது
கருவேப்பிலை - 2 இணுக்கு
தண்ணீர் - 1;2
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
அரிசியை 2 - 3 முறை  கழைந்து தண்ணீர் வடித்து விட்டு பின்பு ஊற வைக்கவும்.


 ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.எண்ணெய் காயும் பொழுது வெங்காயம் ,கருவேப்பிலை சேர்க்கவும்.இளஞ்சிவப்பாக வதக்கவும்.சிவறக் கூடாது.
 இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கவும்.
 பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும். வதக்கவும்.
 தக்காளி சேர்க்கவும்.ஒரு சேர பிரட்டவும்.
 அரிசி அளவிற்கு இரண்டு அளவுத்தண்ணீரில் தயிர் ,எலுமிச்சை ஜூஸ் கலந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதால் சோறு குழையாது.அதனை சட்டியில் ஊற்றவும். உப்பு சரி பார்க்கவும். மூடி கொதிக்க விடவும்.
 கொதி வரும் பொழுது அரிசி தட்டவும்.
சோறு வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது நெய் சேர்க்கவும்.பிரட்டி விட்டு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் புழுங்க விடவும்.
அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து பிரட்டி விட்டு  தயாரான நெய்ச்சோறை சஹனில் எடுத்து பரிமாறவும்.


ஊரில் மொத்த சமையல் செய்த பொழுது கிளிக்கியது.நான் ஒரு கிலோ அரிசி அளவு நெய் சோறு ஆக்க அளவு கொடுத்திருக்கேன்.


2 comments:

Jaleela Kamal said...

ஆஹா ஒருபிடி பிடிக்கனும் போல இருக்கே, சீரக சம்பா அரிசி வாசனை இங்கவரைக்கும் அடிக்குதே

துளசி கோபால் said...

இங்கேயும் வாசிச்சாச்!

டேங்கீஸ்... :-)