Tuesday, October 27, 2015

டூனா மீன் பீன்ஸ் கறி / Tuna beans curry

 தேவையான பொருட்கள்;
டின் டூனா மீன் - 150 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி -1
மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை அல்லது 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது
உப்பு தேவைக்கு.

செய்முறை:
 பீன்ஸ் பொடியாக நறுக்கி வேக வைத்து வைக்கவும்.

 ஒரு கடாஇயில் எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து மேலும் வதக்கவும்.
 தக்காளி சேர்க்கவும். மசிய விடவும். உப்பு சிறிது சேர்க்கவும்.
 மசாலா வகைகள் சேர்க்கவும்.

 ஒரு சேர பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 வெந்த பீன்ஸ் சேர்க்கவும். கலந்து விடவும்.


 டின்னில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு டூனாவை உதிர்த்து சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி அடுப்பில் வைத்து தண்ணீர் ஏதும் ஊறி இருந்தால் வற்ற வைத்து கெட்டியாக வர வேண்டும்.டின் டூனாவில் உப்பு இருக்கும் .எனவே தனியாக உப்பு பார்த்து சேர்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
 பிரட்டி விட்டு பரிமாறவும்.
ரொட்டி அல்லது சூடான சாதத்திற்கு பக்க உணவாக பரிமாறலாம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்த்து விடுகிறோம்.... நன்றி சகோதரி...