Tuesday, November 3, 2015

கத்திரிக்காய் வதக்கல் / Brinjal stir fry

தேவையான பொருட்கள்;
பொடியாக நறுக்கிய பெரிய கத்திரிக்காய் ஒன்று - 300 கிராம்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய சிவப்பு மிளகாய் - 1
நறுக்கிய பூண்டு பற்கள் - 6
மிளகு சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஆலிவ் எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை அல்லது வெங்காயத்தாள்.


 செய்முறை:
 கத்திரிக்காயை நன்கு அலசி நறுக்கிக் கொள்ளவும்.பூண்டு,வெங்காயம் ,மிளகாய் பொடியாக நருக்கி வைக்கவும்.

 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம்,போட்டு சிறிது வதக்கவும்.அத்துடன் பூண்டு ,மிளகாய் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி வதக்கவும்.
 நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 ஓரளவு வதங்கிய பின் உப்பு சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வதங்க விடவும்.
 வதங்கிய பிம் மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.
 நறுக்கிய வெங்காய்த்தாள் அல்லது மல்லியிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
 இது ரொட்டி, குபூஸ் அல்லது ரைஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



4 comments:

Mahi said...

Have never added pepper & jeera to brinjal! Interesting dish!!

பரிவை சே.குமார் said...

வாவ்... சூப்பர் அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்னு தெரியுது.. செய்து பார்த்துட வேண்டியது தான்..

surejini Bala said...

எல்லா கத்தரிக்காய் ரெசிப்பியும் பாத்துட்டேன் ஆசியாக்கா எதைச்செய்யுறது ????? எல்லாமே வித்தியாசமா இருக்கு .சின்ன வெங்காயம் சேத்த கத்தரியை பாத்து செய்ய இருக்கேன் பஸ்ட்.