Friday, December 11, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு -30, திருமதி கசானா ரசூல் - நியுடெல்லா ஐஸ் கிரீம் / Guest Post - Mrs Kasana Rasool / Nutella Ice Cream

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி கசானா ரசூல், இவர் தன்னுடைய சுய அறிமுகத்தில் சொந்த ஊர் நெல்லை, பெங்களூருவில் வளர்ந்து, தற்சமயம் ஷார்ஜாவில் வாழ்ந்து வருவதாகவும், மிக அன்பான இனிமையான கணவர், மகள், மகன்,பாசமிக்க மாமியார் என்ற மகிழ்ச்சியான குடும்பம் என்கிறார்.
 தனக்கு சமையலில் அதீத ஆர்வம் என்றும், செஃப் சஞ்சீவ் கபூரின் சமையல் தன்னுடைய  ஆர்வத்திற்கு கிடைத்த தூண்டுகோல் என்றும் குறிப்பிடுகிறார்,இவர் யாரைச் சந்தித்தாலும் கலந்துரையாடலில் நிச்சயம்  சமையல் இடம் பிடிக்குமென்றும், ஒவ்வொருவருக்கும் தனி  கைப்பக்குவம் இருக்கும் என்கிறார்.
இவர் சமைத்து அசத்தலாமில் பல குறிப்புகள் செய்து பார்த்திருப்பதாகவும், வழக்கமாக வருடாவருடம் குளிர்காலத்தில் பார்க்கில் அல்லது வெளியிடம் சென்று பார்பிகியூ செய்யும் பொழுது என் குறிப்புகளின் படி செய்து அசத்தியதாகவும் குறிப்பிடுகிறார். 
மகிழ்ச்சி கலந்த மனமார்ந்த நன்றி கசானா.

திருமதி கசானா குடும்பத்திற்கு நல்வாழ்த்துக்கள் சொல்லி,  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள வரவேற்போம்.

இனி அவர் பகிரப்போகும் இலகுவான யம்மியான நியுடெல்லா ஐஸ் கிரீம் குறிப்பு இதோ!
 தேவையான பொருட்கள்;
வாழைப்பழம் மீடியம் சைஸ் - 2
நியுடெல்லா - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 நறுக்கிய பழத்துண்டுகளை ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைக்கவும். அல்லது ஃப்ரீசர் பாக்ஸில் போட்டும் வைக்கலாம்.

 முழுவதுமாக ஃப்ரீஸ் ஆனவுடன் வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 15  நிமிடம் வைக்கவும்.


 ஃப்ரீசரில் இருந்து எடுத்த வாழைப்பழத் துண்டுகள்,நியுடெல்லா  சேர்த்து  மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.

 அரைத்ததை ஃப்ரீசர் பாக்சில் விட்டு,  ஃப்ரீசரில் நான்கு மணி நேரம் வைக்கவும்.
 வெளியே எடுத்து ஒரு குழிவான கரண்டி அல்லது ஐஸ்கிரீம் ஸ்கூப் கொண்டு எடுத்துப் பரிமாறவும்.
டேஸ்டி ஹெல்தி நியுடெல்லா ஐஸ்கிரீம் ரெடி. யம் யம் யம்மி.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இலகுவாகக் கிடைக்கும் பொருட்கள் இரண்டை மட்டுமே வைத்து இத்தனைச் சுவையான டெசர்ட் செய்து பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி கசானா.

இப்பகிர்வு உங்களுக்குப் பிடித்திருந்தால் செய்து பாருங்க. நிச்சயம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் ஒரு சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

3 comments:

கோமதி அரசு said...

நியுடெல்லா ஐஸ்கீரீம். நன்றாக இருக்கிறது. சிறப்பு விருந்தினர் திருமதி. கசானா ரசூல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறப்பு விருந்தினர் அறிமுகமும், நியுடெல்லா ஐஸ் கிரீம் செய்முறையும், அதற்கான படங்களும் அருமை. பாராட்டுகள்.

jmbalatheef habeer said...


nutella icecream super.children like very much.BEST WISHES FOR NEW GUEST.