Sunday, December 20, 2015

சுட்ட அயலை மீன் / Barbecued Mackerel fish (spicy)

மீனைச் சுட்டு சாப்பிட்டு பாருங்க அதன் ருசியே தனி தான்.
தேவையான பொரூட்கள்;
அயலை மீன் - 10 - 12 எண்ணம்
மசாலா தயார் செய்ய:
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு  பேஸ்ட் - 2   டீஸ்பூன் (அல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் )
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ்  - 1 பழத்தில் இருந்து
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
மீனின் செதில் எடுத்து, வயிற்றை சுத்தம் செய்து நான்கு ஐந்து முறை  அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

 மீன் தவிர மேற் சொன்ன பொருட்களை ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். பின்பு அதனை எல்லா மீனிலும்   லேசாகத் தடவி ஊற வைக்கவும்.

 

பார்பிகியூ செய்யக் கூடிய கம்பி தட்டில் மீனை அடுக்கவும்.

 அடுப்பை பற்றி நன்கு தீக் கங்கு வந்தவுடன் மீன் அடுக்கிய தட்டை வைக்கவும்.
 ஒரு புறம் சுட்டவுடன் மறுபுறமும் திருப்பி சுடவும்.
மீனின் மீது லேசாக ஆலிவ் எண்ணெய் தெளிக்கலாம்.
 நன்றாக சுட்டவுடன் ஒரு பெரிய குபூஸ் அல்லது ரொட்டி வைத்து அதன் மீது சுட்ட மீனை அடுக்கி அலுமினியம் ஃபாயிலில் பொதிந்து வைக்கலாம்.
பின்பு எடுத்துப்  பரிமாறலாம்.
சுவையான சத்தான சுட்ட அயலை மீன் தயார்.
இது போல் வேறு எந்த மீன் விருப்பமோ அதனை முழுதாக சுட்டுப் பரிமாறலாம்.



நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படு சுட்டு சாப்பிட்டுப் பாருங்க.
கம்பி தட்டு இல்லதவங்க அலுமியம் ஃபாயிலில் பொதிந்து நெருப்பில் போட்டும்  சுடலாம்.

ரெசிப்பி :
நன்றி ! திருமதி பதருன்னிஷா மஜித்.

No comments: