Monday, December 21, 2015

காலிப்ளவர் மஞ்சூரியன் / Cauliflower Manchurian

தேவையான பொருட்கள்;
முதலில் பொரித்து எடுக்க:
அரைக்கிலோ  காலிப்ளவர் - 1
(சிறிய துண்டுகளாகப் பிரித்து கொதி நீரில் போட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்)
மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 4 டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய இஞ்சி பூண்டு  விழுது-  1  டீஸ்பூன்
உப்பு - சிறிது.
தேவைப்பட்டால் விரவும் பொழுது சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
பொரிக்க எண்ணெய் தேவைக்கு.
செய்முறை:
.
சிறிய துண்டுகளாகப் பிரித்து கொதி நீரில் போட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்)

மேற்சொன்ன பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தும் சேர்த்து கலந்து விரவி வைக்கவும்
தேவைக்கு எண்ணெய் சூடு செய்து சிறிது சிறிதாக போட்டு நன்கு முறுவலாக பொரித்து எடுக்கவும்.



எண்ணெய் வடிய விட்டு தனியாக வைக்கவும்.
இனி மஞ்சூரியன் செய்ய :
ஒரு மேகி சூப் கியூப் - கால் கப் வெந்நீரில் கரைத்து வைக்கவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்லோரையும் சிறிது கரைத்து வைக்கவும்.

ஒரு கொடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் ஒரு கொத்து, பச்சை மிளகாய் 1 அல்லது 2 ,வெங்காயம் ஒன்று.ஒரு சிறிய துண்டு  இஞ்சி  நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் காலிஃப்ளவர் பொரித்த எண்ணெயில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், வெங்காயம்,கொடைமிளகாய்  போட்டு வதக்கவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் விடவும்.சூப் கியூப் கரைசலை சேர்க்கவும்.ஒரு சேர பிரட்டவும்.
பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து மீண்டும் பிரட்டவும்.விருப்பமானால் டொமட்டோ சாஸ் சேர்க்கலாம்.


இங்கு இணைக்க வேண்டிய படம் சுத்தமாக சரியாக வரலை. அதனால் இந்த ஸ்டெப் படம் சேர்க்க முடியலை.வருந்துகிறேன்.

தேவைப்பட்டால் கார்ன்ஃப்லோர் கரைசலை விட்டு கெட்டியாக  அல்லது கிரேவியாக வருமாறு ஒரு சேர பிரட்டி,நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து பிரட்டி  இறக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி.
சப்பாத்தி,பரோட்டா அல்லது நான், ஃப்ரைட் ரைஸ் உடன்பரிமாறவும்.

No comments: