Tuesday, December 15, 2015

நெல்லை திருப்பாகம் / Nellai Thirupagam

  நன்றி சங்கரி பகவதி.இவங்களை பார்த்து தான் இந்த திருப்பாகம் செய்தேன். செமை ! இலகுவாக செய்யக் கூடிய நெல்லை ஸ்பெஷல் இனிப்பு பதார்த்தம்.
தேவையான பொருட்கள்;
கடலை மாவு - ஒரு கப்
காய்ச்சாத பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - ஒரு கப்
சாஃப்ரான் - ஒரு பெரிய பின்ச்
முந்திரி பருப்பு - அரை கப் (பொடிக்கவும்)
பச்சை கற்பூரம் - விரும்பினால் மிளகளவு.
செய்முறை:


தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.ஒரு பவுலில் பாலுடன் சாஃப்ரான் சேர்த்து ஒரூ கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
 நாம் திருப்பாகம் செய்யப் போகும் அடிகனமான பத்திரத்தில் சாஃப்ரான் பால் கரை சல் சேர்த்து அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
 சிறிய தீயில் கைவிடாமல் கிளறவும்.
 கடலை மாவு கெட்டியாகும் சமயம் சீனி சேர்க்கவும்.
 சீனி கரைந்து திக்காகி வரும்.
சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.கிளறவும்.திக்காகி வரும், நெய் ஓரமாக வெளி வரும்.
 முந்திரித்தூள் சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விட்டு கிளறவும்.
 விரும்பினால் பச்சை கற்பூரம் சேர்க்கவும்.நான் சேர்க்கலை.
பதம் அல்வா மாதிரி மெதுவாக இருக்க வேண்டும்.
சுவைத்தால் நாவில் கரையும்  திருப்பாகம் ரெடி.
அப்படியே நெய் தடவிய ஒரு பவுல் அல்லது ஒரு ப்லேட்டில் எடுத்து வைக்கவும். தேவைக்கு எடுத்துப் பரிமாறவும்.விஷேசமாக சமைக்கும் பொழுது   இனிப்பிற்கு இதனை செய்து இலையில் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே நல்லா இருக்கே.... சுவைத்தால்....

நிச்சயம் நல்லாத் தான் இருக்கும்! பகிர்வுக்கு நன்றி.

Sumathi M said...

மிகவும் அருமை. செய்து பார்க்க வேண்டும். நன்றி.