Thursday, December 17, 2015

புளிச்சக்கீரை / கோங்குரா ஜூஸ் / Sorrel drink / Juice

எங்க வீட்டுப் பக்கம் வாக்கிங் போகும் பொழுது இந்த புளிச்சக் கீரைச் செடி நல்ல  பூவும்,பழமுமாக காட்சியளித்தது.ஒரு அரபியர் நின்று தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.  நான் கீரை கேட்டேன்.அவரோ பழமும் பறித்து தந்து ஜூஸ் செய்து குடிக்குமாறு சொன்னார். உடனே கூகிள் செய்து ஜூஸ் தயார் செய்து விட்டேன்.டேஸ்ட் செமை.

தேவையான பொருட்கள்;
கோங்குரா /புளிச்சக்கீரை பழம் - இரண்டு கையளவு
பட்டை - ஒரு சிறிய துண்டு
தட்டிய இஞ்சி - ஒரு துண்டு 
கிராம்பு - 2
சர்க்கரை - அரை கப் அல்லது தேவைக்கு. 
செய்முறை:
பழத்தை பறித்து வந்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி வெளியே சிவப்பாக தெரியும் இதழ் போன்ற பகுதியை தனியாக எடுக்கவும்.
சிறிது உலர விட்டும் இவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


 அதனை 2 அல்லது 4  கப் தண்ணீர் விட்டு பட்டை,கிராம்பு,இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.தேவைக்கு சர்க்கரை சேர்க்கவும்.
 சிவப்பான பகுதி கரைந்து வரும் சமயம்  வடி கட்டவும்.


ஆற விட்டு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
தேவைக்கு தண்ணீர் சேர்த்து பருகலாம். இந்தப் பானம் இனிப்பும் புளிப்புமாக சூப்பராக இருக்கும்.
சோரல் ஜூஸ் ரெடி. 
கிரிஸ்மஸ் ஸ்பெஷல் கேக்குடன் பரிமாறலாம்.
நீங்களும் இந்தப்பழம் கிடைத்தால் செய்து பாருங்க.எங்களுக்கு பிடிச்சிருக்கு.நிறைய மருத்துவ குணம் மிக்கது உடல் நலத்திற்கு நல்லதுன்னு சொல்றாங்க.

No comments: