Wednesday, December 16, 2015

கோதுமை மாவு பூரி / உருளைக்கிழங்கு மசால் / Wheat Flour Poori / Potato Masala

சிம்பிளாக செய்யக் கூடிய பூரி மசால் குறிப்பு இது.டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

கோதுமை மாவு பூரி:
தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் ,உப்பு தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

 செய்முறை:
ஒரு பவுலில் மாவை எடுத்துக் கொள்ளவும். தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின்பு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிரித்து வைக்கவும்.
கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
உருண்டைகளை மாவு தொட்டோ அல்லது எண்ணெய் தொட்டோ பூரிகளாகத் திரட்டவும்.
மாவில் பிரட்டி திரட்டினால் ஒன்றி மேல் ஒன்று அடுக்கி கூட வைக்கலாம். எண்ணெய் தொட்டு திடட்டினால் ஒரு பெரிய தட்டில் நான்கு அல்லது ஐந்து பூரிகளாக இட்டு பரத்தி வைத்து விட்டு பின்பு சுட ஆரம்பிக்கவும்.
சூடான எண்ணெயில் பொறுமையாக ஒவ்வொன்றாகத் திரட்டியதைப்  போட்டு  பூரி புஸ் என்று பொங்கி வரும் பொழுது எண்ணெய் வடித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
ஒவ்வொரு ஆளாக உட்கார வைத்து சூடாக சுட்டுப் பரிமாறவும்.
டிப்ஸ்:
பூரி க்கு திரட்டும் பொழுது சிறிது மெத்தென்று இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொங்கி வரும்.
சப்பாத்திக்கு என்றால் உருண்டையை மெல்லியதாக திரட்ட வேண்டும்.

உருளைக்கிழங்கு மசால்:
தேவையான பொருட்கள்;
வேக வைத்த உருளைக்கிழங்கு  மீடியம் சைஸ்- 4
பெரிய வெங்காயம் நறுக்கியது - 2
சின்ன தக்காளி நறுக்கியது - 1
பச்சை மிளகாய் நீள் வாக்கில் நறுக்கியது - 4
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது.
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் ( சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்)
கருவேப்பிலை, மல்லி இலை -சிறிது.


செய்முறை:
உருளைக்கிழங்கை குக்கரில் 3 விசில் வேக வைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிது உப்பு,மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து வதக்கவும்.மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
பிரட்டி விடவும். எனக்கு மசால் கொஞ்சம் லூசாக இருந்தால் பிடிக்கும், அரை கப் தண்ணீர் சேர்க்கவும்,உப்பு கொஞ்சம் கரெக்டாக இருக்க வேண்டும்.கொதிக்க விடவும். நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையாக இலகுவாகச் செய்யக்கூடிய பூரி உருளைக்கிழங்கு மசால் ரெடி.
பூரியுடன் தேங்காய் சட்னியும் நல்லாயிருக்கும்

அடிக்கடி செய்தாலும் இந்த பூரிக்கிழங்கு ரெசிப்பி இங்கே கொடுக்கலை.அப்பாடா இப்ப கொடுத்தாச்சு.

என்னோட சென்னை சரவணபவன் பூரி மசால் ரெசிப்பிக்கு இங்கே கிளிக்கவும்.

3 comments:

Mahi said...

எங்க வீட்டில பூரி-மசாலுக்கு இதுதான் ஸ்டாண்டர்ட் ரெசிப்பி. மசால்ல ஊறவைச்ச கடலைப்பருப்பு சேர்க்கறது மட்டும் புதுசா இருக்கு அக்கா. கூடவே தேங்காய்ச் சட்னியும் செஞ்சா சூப்பர் காம்பினேஷன்!! :)

Asiya Omar said...

மகி வருகைக்கு மகிழ்ச்சி. எனக்கும் பூரியுடன் தேங்காய் சட்னி மிகவும் பிடிக்கும்.உங்களுக்காக தேங்காய் சட்னியுடன் பூரி பரிமாறி படம் இணைச்சாச்சு.

Shamee S said...

செமையா இருக்கு.

நானும் இப்படிதான் அக்கா செய்வேன். ஆனால் மசாலாவில் சிறிது மிளகாய் தூளும் சேர்ப்பதுண்டு.

காலைல ஆபிஸ் வந்ததும் உங்க பூரிமசால் பார்த்து ஆசை வந்துடுச்சு.