Monday, June 8, 2015

வெண்டைக்காய் இஞ்சி வறுவல் / Bhindi Ginger Fry


வித்தியாசமாக இருந்தது இந்த ரெசிப்பி, ஃபேஸ் புக் நெல்லை ஃபுட் கைட்  பகிர்வில்    போஜனா ரெசிப்பி   பார்த்து செய்தேன். நல்லாயிருந்தது. நன்றி திருமதி சுபாஷிணி.
தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - அரைக் கிலோ
ஃப்ரெஷ் கெட்டித் தயிர்  - 1 கப்
இஞ்சி - 20 கிராம்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கடலை மாவு , கார்ன் மாவு - தலா 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு.
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:
வெண்டைக்காயை கழுவி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி,பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் எண்ணெய் தவிர மேற் சொன்ன பொருட்கள் அனைத்தும்  வெண்டைக்காயுடன் சேர்க்கவும்.அரைத்த இஞ்சி,மிளகாய் சீரகம்  விழுதையும் சேர்க்கவும்.


 கையால் நன்கு கலந்து வைக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டும். வெண்டைக்காயில் மசாலா எல்லாம் ஒட்டியிருக்க வேண்டும். உப்பு சரி பார்க்கவும்.
 வாணலியில் எண்ணெய் தேவைக்கு காயவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடித்து எடுத்து  கிச்சன் டிஸ்யூவில் வைத்து பின்பு பரிமாறவும்.

 சுவையான வெண்டைக்காய் இஞ்சி வறுவல் ரெடி.
காரம் அவரவர் விருப்பம். பிடித்திருந்தால் செய்து பாருங்க.பக்குவமாக செய்ய வேண்டும்.

Sunday, June 7, 2015

சுரைக்காய் கொத்து பருப்பு / Bottle gourd Dal

 தேவையான பொருட்கள்;
நறுக்கிய சுரைக்காய் - 3 கப்
பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி சிறியது - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
தாளிக்க :
எண்ணெய் நெய் கலவை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1டீஸ்ஊன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் நருக்கியது - கொஞ்சம்.
செய்முறை:
பருப்பை கழைந்து  சிறிது நேரம் ஊற விடவும்.குக்கரில் பருப்பு  சேர்த்து முங்கும் அளவு தண்ணீர் வைக்கவும். மஞ்சள் தூள் போடவும். கொதிக்கட்டும்.
சின்ன வெங்காயம்  5 எண்ணம் ,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

 கொதிக்கும் பொழுது நறுக்கிய சுரைக்காய் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்
 மூடி 2  விசில் வரட்டும்.
 ஆவியடங்கியவுடன் திறக்கவும். .
 கலந்து விடவும்.பருப்பு கொத்து கொத்தாக வெந்து இருக்கும்.
 தாளித்து கொட்டவும்.தாளிப்பு லேசாக சிவற வேண்டும்.
 வேக வைத்த சுரைக்காய் பருப்பு சேர்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
 சூடாய் சாதம் வகையறாக்களுடன் பரிமாறவும்.

 சுரைக்காய் விதம் விதமாய் சமைப்பேன். பருப்பு சேர்த்தே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதம். இதனை சாம்பார் பொடி சேர்த்தும் செய்யலாம், குழம்பு மசாலா சேர்த்தும் செய்யலாம்.எப்படி செய்தாலும் சுரைக்காய் ருசிக்கும்.


Friday, June 5, 2015

சிறப்பு விருந்தினர் பகிர்வு -26 / திருமதி நிஷா காஜா / ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா / Guest Post -26 / Stuffed Ivy gourd Masala

இன்றைய சிறப்பு விருந்தினர்.திருமதி நிஷா காஜா, இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அன்பான குடும்பத்தலைவி. கணவர் காஜா அப்துல்லா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இரண்டு மகன்கள் என்ற இனிமையான குடும்பம். 
தன்னுடைய பொழுதுபோக்காக  தையல், வீடு மற்றும் தோட்டத்தை மிக அழகாக பராமரிப்பது  மற்றும் இவருக்கு யோகாவில் அதீத ஆர்வம் என்கிறார். 
நிஷா அக்காவிடம் எனக்கு பிடித்தது, பரந்த மனப்பான்மையுடையவர், கடின உழைப்பாளி, எது செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

இவர் இன்று நம்முடன் பகிரவிருக்கும் குறிப்பு  மைக்ரோவேவில் சுலபமாகச் செய்யக் கூடிய ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா. வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சில நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய குறிப்பு.
மைக்ரோவேவில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. அடுப்பிலும் செய்யலாம்.



தேவையான பொருட்கள்;



கோவைக்காய் - கால் கிலோ
வீட்டில் இருக்கும் இட்லி மிளகாய்ப்பொடி - தேவைக்கு.
நல்ல எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர் - 50 மில்லி
உப்பு - சிறிது தேவைக்கு.
செய்முறை:
 அவர் தோட்டத்தில் விளைந்த கோவைக்காய் வைத்து செய்திருப்பதாக தெரிவிக்கிறார்.






முதலில் கோவைக்காயை நன்கு அலசி கீழே தொடுப்பு இருக்குமாறு மேலிருந்து நான்காக கீறிக் கொள்ளவும்.
கீறிய காயில்  இட்லி மிளகாய்ப்பொடியை எடுத்து வைக்கவும்.இப்படியே எல்லாக்காயிலும் நிரப்பிக் கொள்ளவும்.
ஒரு மைக்ரோவேவ் பவுலில் எண்ணெய் விடவும். ஸ்டஃப்ட்  செய்த கோவைக்காயை போடவும்.
2 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து  எடுக்கவும்.
பின்பு புளித்தண்ணீர் தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
மீண்டும் 2 நிமிடம் மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.
சுலபமாக செய்யக் கூடிய சுவையான மைக்ரோவேவ் ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா  ரெடி. 
இதனை சூடான சாதத்துடன் பரிமாறலாம். செமையாக இருக்கும். உடன் பொரித்த பப்படம் இருந்தால் கூட போதும்.பிடித்திருந்தால் செய்து பாருங்க. இதே முறையில் உங்களுக்கு பிடித்த மசாலா ஸ்டஃப் செய்தும் செய்து பார்க்கலாம்.

அக்கா இந்தக் குறிப்பை என்னிடம் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார், நான் இதனை சிறப்பு விருந்தினர் பகிர்வில் சேர்த்து விட்டேன். பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி அக்கா.
மீண்டும் ஒரு இனிய சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம்.

Tuesday, June 2, 2015

தக்காளிப் பச்சடி / Tomato Pachadi

  தேவையான பொருட்கள்;
தக்காளி - 5 பெரியது அல்லது அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - 1 அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3  நீள வாக்கில் நறுக்கியது
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
வேக வைத்த துவரம் பருப்பு - 2 -3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2  - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது.
தாளிக்க:
நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:
தாளிக்க சொன்ன பொருட்களை சேர்த்து ஒரு வாணலியில் தாளிக்கவும்.

  நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்.மூடி போட்டு நன்கு மசிய விடவும். மஞ்சள் பொடி,சாம்பார் பொடி சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.
 வேக வைத்த பருப்பு சேர்க்கவும். கலந்து விடவும்.
 தேங்காய்த்துருவல் சேர்க்கவும். மிளகாயை கீறி போடாமல் தேங்காயுடன் 2 எண்ணம் மிளகாய் சேர்த்து பர பரவென்று  அரைத்தும் சேர்க்கலாம். உப்பு சரிபார்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.சிம்மில் ஒரு நிமிடம் வைக்கவும்.
 நறுக்கிய மல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
 சுவையான தக்காளிப் பச்சடி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி,இட்லி,தோசை இவற்றுடன் பரிமாறலாம்.