Saturday, October 31, 2015

ஜிஞ்சர் சில்லி சிக்கன் விங்ஸ்/ Ginger chilli chicken wings



தேவையான பொருட்கள்;
ஊற வைக்க :
ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் - 1 கிலோ
கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 -2  டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
உப்பு சிறிது.
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 6 (காரத்திற்கு) மல்லி இலை  ஒரு கையளவு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பொரிக்க:
எண்ணெய் - 4-5 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன் அல்லது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்(உங்கள் விருப்பம்)
அஜினோமோட்டோ - விரும்பினால் சிறிது.(நான் சேர்க்கவில்லை).
மேலே தூவ மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
அலங்கரிக்க : நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன்.



சிக்கன் விங்ஸ் சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீரே இல்லாதபடி வடித்து வைக்கவும்.
பின் பு அத்துடன்  கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 -2  டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்,சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு 1 மணி நேரம் ஊற விடவும்.


பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப ) மல்லி இலை  ஒரு கையளவு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு அகலமான நான்ஸ்டிக் சேலோ ஃப்ரை பேனில் எண்ணெய் விடவும். ஊறிய சிக்கனை பரத்தி போடவும்.
எண்ணெய் சூடானவுடன் ஊறிய சிக்கன் விங்ஸ் சேர்த்து இருபுறமும் திருப்பி பொரிய விடவும். நான்ஸ்டில் ஃப்ரை பேனில் தான் இந்த ரெசிப்பி செய்ய வேண்டும்.
சிக்கன் ஃப்ரை ஆனவுடன் நறுக்கிய அல்லது கொரகொரப்பாக அரைத்த இஞ்சி பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.
அத்துடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.பிரட்டி உப்பு சரிபார்க்கவும்.தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
பிரட்டி விட்டு மூடி வேக விடவும். பச்சை வாடை போய் சுருண்டு வர வேண்டும்.மிளகுத்தூள் சேர்க்கவும்.
ஒரு சேர பிரட்டி விடவும்.சிக்கன் விங்ஸ் துண்டுகள் தனித் தனியாக  எடுக்குமாறு நாம் சேர்த்த பொருட்கள் அதனில் ஒட்டி இருக்க வேண்டும். எண்ணெய் வடித்து விட்டு சிக்கனை எடுக்க வேண்டும்.
நான் எடுத்த பரிமாறிய படம் சரியாக வரவில்லை.
ஸ்டார்டராக அல்லது லஞ்ச் அல்லது டின்னருக்கு சைட் டிஷாக செய்து அசத்தலாம்.
டேஸ்ட் சூப்பர்னு எல்லாரும் சொன்னாங்க. சிக்கனில் நான் விதம் விதமாக முயற்சி செய்வேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்து பாருங்க.

Tuesday, October 27, 2015

டூனா மீன் பீன்ஸ் கறி / Tuna beans curry

 தேவையான பொருட்கள்;
டின் டூனா மீன் - 150 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி -1
மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள் - தலா கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை அல்லது 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது
உப்பு தேவைக்கு.

செய்முறை:
 பீன்ஸ் பொடியாக நறுக்கி வேக வைத்து வைக்கவும்.

 ஒரு கடாஇயில் எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து மேலும் வதக்கவும்.
 தக்காளி சேர்க்கவும். மசிய விடவும். உப்பு சிறிது சேர்க்கவும்.
 மசாலா வகைகள் சேர்க்கவும்.

 ஒரு சேர பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 வெந்த பீன்ஸ் சேர்க்கவும். கலந்து விடவும்.


 டின்னில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு டூனாவை உதிர்த்து சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி அடுப்பில் வைத்து தண்ணீர் ஏதும் ஊறி இருந்தால் வற்ற வைத்து கெட்டியாக வர வேண்டும்.டின் டூனாவில் உப்பு இருக்கும் .எனவே தனியாக உப்பு பார்த்து சேர்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
 பிரட்டி விட்டு பரிமாறவும்.
ரொட்டி அல்லது சூடான சாதத்திற்கு பக்க உணவாக பரிமாறலாம்.

இனிப்பு கவுனி அரிசி / Inipu kavuni arisi


 தேவையான பொருட்கள்;
கவுனி அரிசி - 1 கப், சீனி - 1 கப்,நெய் -1 டேபிள்ஸ்பூன். ஏலப்பொடி - 2 பின்ச்
தேங்காய்த்துருவல் -அரை - 1 கப்,பின்ச் உப்பு -சுவைக்கு. 

கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
 ஒன்று அல்லது இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை குறைத்து 20 நிமிடம் வைக்கவும். வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். 
 ஆவியடங்கியவுடன் திறந்து மசித்து விட்டு சீனி, நெய் ஏலப்பொடி சேர்ந்து கலந்து பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்.ஏலப்பொடி விரும்பினால் சேர்க்கவும்.சும்மாவே மணமாக இருக்கும்.
சுவையான சத்தான இனிப்பு கவுனி அரிசி ரெடி.

கலந்து வெது வெதுப்பாக பரிமாறாவும்.இது மிட்டா ரைஸ் மாதிரியே ருசியாக நல்ல மணமாக இருக்கும்.
எங்களுடைய சின்ன வயதில் வீட்டு வயலிலேயே விளைந்து வரும். காலையில் பசியாற இதனை செய்து தருவார்கள். இதனை இப்பொழுது சாப்பிட்ட பொழுது அந்த நினைவு தான் வந்தது.

Sunday, October 11, 2015

நெல்லை நெய்ச் சோறு / Nellai Ney Choru



 தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அரிசி - 1 கிலோ (விரும்பினால் இத்துடன் வாசனை சம்பாவும் கலந்து ஆக்கலாம்)
நறுக்கிய  வெங்காயம் - 2
நறுக்கிய சிறிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய மல்லி,புதினா - சிறிது
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை டேபிள்ஸ்பூன்
ஏலம்,பட்டை,கிராம்பு  தூள் - அரை டீஸ்பூன் அல்லது முழுசாகவும் போடலாம்.
தயிர் - 150- 200 மில்லி
எலுமிச்சை - சிறியது
கருவேப்பிலை - 2 இணுக்கு
தண்ணீர் - 1;2
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
அரிசியை 2 - 3 முறை  கழைந்து தண்ணீர் வடித்து விட்டு பின்பு ஊற வைக்கவும்.


 ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.எண்ணெய் காயும் பொழுது வெங்காயம் ,கருவேப்பிலை சேர்க்கவும்.இளஞ்சிவப்பாக வதக்கவும்.சிவறக் கூடாது.
 இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கவும்.
 பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும். வதக்கவும்.
 தக்காளி சேர்க்கவும்.ஒரு சேர பிரட்டவும்.
 அரிசி அளவிற்கு இரண்டு அளவுத்தண்ணீரில் தயிர் ,எலுமிச்சை ஜூஸ் கலந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதால் சோறு குழையாது.அதனை சட்டியில் ஊற்றவும். உப்பு சரி பார்க்கவும். மூடி கொதிக்க விடவும்.
 கொதி வரும் பொழுது அரிசி தட்டவும்.
சோறு வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது நெய் சேர்க்கவும்.பிரட்டி விட்டு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் புழுங்க விடவும்.
அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து பிரட்டி விட்டு  தயாரான நெய்ச்சோறை சஹனில் எடுத்து பரிமாறவும்.


ஊரில் மொத்த சமையல் செய்த பொழுது கிளிக்கியது.நான் ஒரு கிலோ அரிசி அளவு நெய் சோறு ஆக்க அளவு கொடுத்திருக்கேன்.