Sunday, January 3, 2016

அவல் பொங்கல் / Aval Pongal / Flattened Rice Pongal

 தேவையான பொருட்கள்;
பாசிப்பருப்பு - 100 கிராம்
(வேக வைக்க 2 பின்ச் மஞ்சள் தூள்)
அவல் - 200 கிராம்
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
இஞ்சி பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1 -2
கருவேப்பிலை - 2 இணுக்கு
முந்திரிபருப்பு - சிறிது.


செய்முறை:-
அவலை தண்ணீரில் நன்கு அலசி சிறிது ஊறவிட்டு  தண்ணீர் சுத்தமாக வடித்து வைக்கவும்.

 தாளிக்க சாமானை தயார் செய்து கொள்ளவும்.

 பாசிப்பருப்பை ஊற விட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
 அத்துடன் ஊறிய அவலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 மேலே குறிப்பிட்ட பொருட்கள் சேர்த்து தாளித்து கொட்டவும்.

 சுவையான அவல் பொங்கல் ரெடி. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

 ரெசிப்பி ஐடியா : திருமதி நிஷா காஜா. மிக்க நன்றி அக்கா.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும் போல! சுலபமாகவும் செய்ய முடியும்னு தோணுது.... செஞ்சு பார்த்துடலாம்....

பரிவை சே.குமார் said...

ஆஹா... நல்லாயிருக்கும் போல...
செய்து பார்த்திடணும்....

Shamee S said...


ரெசிபி சூப்பர்.அவல் கைவசம் இருக்கு.உடனே செஞ்சு பார்த்திடறேன்.

Parveen said...

Super recipe