Monday, January 11, 2016

கல்மி கபாப் / Kalmi Kebab

பல முறை செய்தாலும் இந்தக் குறிப்பு கொடுக்காமலே விட்டு போய்விட்டது.எனவே இப்ப பகிர்ந்தாச்சு.
தேவையான பொருட்கள்;
முதலில் ஊற வைக்க:
சிக்கன் லெக் பீஸ் - 12 - 15 எண்ணம் (பெரியதாக) ( ஒன்னரை - 2 கிலோ)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
இரண்டாவது சேர்க்க வேண்டியவை:
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
விரும்பினால் - முந்திரி பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
தந்தூரி மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.
இறுதியாக தடவ பட்டர் - ஒரு கியூப், அலங்கரிக்க எலுமிச்சை வெங்காய துண்டுகள்.
செய்முறை:

ஃப்ரெஷ் சிக்கன் லெக் பீஸ் தோல் நீக்கி நன்கு அலசி மசாலா உள்ளே இறங்க வசதியாக கீறி விட்டுக் கொள்ளவும்.
இறுதியாக மஞ்சள் நீரில் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மேற்சொன்னபடி பொருட்கள் சேர்த்து முதலில் அரை மணி ஊற வைக்கவும்.
பின்பு இரண்டாவது சொன்ன பொருட்கள் சேர்த்து நன்கு கலந்து மீண்டும் சுமார் குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

கேஸ் ஓவன் அல்லது பார்பிகியூ அடுப்பில் மீடியம் அனலில் சுட்டு எடுக்கவும்.
கேஸ் ஓவன் என்றால் ஒரு பக்கம் வேக அரைமணி நேரம் ,மறுபக்கம் வேக அரைமணி நேரம் மொத்தம் ஒரு மணி நேரம் ஆகும்.எலெக்ட்ரிக் ஓவனிலும் செய்யலாம்.
சுவையான கல்மி கபாப் ரெடி.
சுட்டு எடுத்த சிக்கன் கபாபில்  சிறிது பட்டர் தடவி, எலுமிச்சை வெங்காய துண்டுகள் அலங்கரித்து பரிமாறவும்.
இதனை ஒரு சிலர் மூர்க் மலாய் கபாப் அல்லது ரேஸ்மி கபாப் என்று கூட சொல்றாங்க.

3 comments:

Jaleela Banu said...

கல்மி கபாப் மிக மிக அருமை
நானும் இதை பலமுறை செய்து விட்டேன் ஆசியா. ஆனால் போட்டோ எடுக்க முடியவில்லை
டபுள் கோட்டிங் மேரினேஷன் ல அருமையாக இருக்கும்.

Jaleela Banu said...

விருந்து பலமாக இருக்கிறது,வரலாமா?
முட்டைவட்லாம் சால்னா, ம்ம்ம்

Asiya Omar said...

வாங்க,வாங்க..ஜலீலா உங்களை மாதிரி ஆல் இன் ஆல் க்கு சமைக்கனும்னா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.ஹி.ஹி.