Sunday, February 14, 2016

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையில்லை ..

ஆறாம் ஆண்டு நிறைவு - சமைத்து அசத்தலாம்.
கடந்த இரண்டு வருடங்களாகவே வலைப்பூவிற்குச் செலவழித்த நேரம் போதும் என்ற எண்ணம் மேலோங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
அதன் பின் வருகையாளர்கள் எண்ணிக்கையைப் பார்ப்பேன்.
என்னையும் நம்பி ஒரு நாளைக்கு 1000, 1500. 2000  என்ற எண்ணிக்கையில்  நபர்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு வீட்டில் எது புதிதாக முயற்சி செய்தாலும் பகிர்ந்து வந்தேன்.
இப்பொழுது சமையல், சாப்பாடு புகைப்படங்களை படம் பிடிப்பது என்பது இரத்தத்தில் ஊறிய ஒன்றாகவே ஆகிவிட்டதோ என்ற எண்ணம். நான் வேண்டாம் என்று நினைத்தாலும் என் கணவரே, படம் எடுக்கலையா என்று கேட்கும்  அளவிற்கு போய்விட்டது.
நாமே தான் எத்தனை நாட்கள் சமைத்துப் பகிர்வது என்று சிறப்பு விருந்தினர்கள் பகிர்வு ஆரம்பித்தேன்.படங்கள், குறிப்புகள் இன்றும் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கிறது.
எனக்குத்தான் போஸ்டிங் செய்ய சலிப்பு ஏற்பட்டுவிட்டது.அதனால் ஃபேஸ்புக்கில் Share Your Recipes என்ற பக்கம் ஆரம்பித்து அங்கு மற்றவர்கள் பகிர்வை நாள் ஒன்றுக்கு, ஒன்றாகவாவது பகிர்வது என்று முயற்சி செய்கிறேன். அதுவும் இயலவில்லை. ஒரு உதவியாளர் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்.ஹி.ஹி. இது கொஞ்சம் ஓவராத்தான் தெரியும் உங்களுக்கு. உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை. அரை நூற்றாண்டை நெருங்கும் தருவாயில் இரூப்பதால் இருக்குமோ !

இங்கு மூன்று நான்கு வருடங்களாக, மாதம்  2 டாலர் கூகிள் என் கணக்கில் இருந்து பிடித்துக் கொள்கிறது.
ஆனால் இரண்டு மாதம் முன்பு  கூகிளிடம் இருந்து, நீங்கள் இலவசமாகப் பகிரலாம் என்று மெயில் வந்தது. ஆனால் எனக்குத்தான் பகிர ஒரு விதமான சலிப்பு,சோம்பல். ஃபைலில் படங்களும் குறிப்புகளும் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை gallery அமைத்து பார்த்து மகிழ்வதோடு சரி.

ஒரு நேரம் இந்த உழைப்பிற்கு எந்த பலனும் இல்லையே என்று நினைக்கும் பொழுது சிறிது வருத்தமாக இருந்தாலும்..இன்று உலகெங்கும் உள்ள அனபான நட்புகளைப் பெற்றதே போதும்  என்ற என்ணமே என் மனசை நிறைவடையச் செய்து விட்டது. அந்தப் பிரியம் ஒன்றே இத்தனை ஆண்டு காலம் நான் சம்பாதித்தது.
எனக்கு மீண்டும் ஆர்வம் வரும் பட்சத்தில் என் பயணம் தொடரும்.
ஆர்வம் நாளையோ, மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ கூட வரலாம். பொறுத்திருப்போம்.
அன்பான வருகையாளர்களுக்கும், ப்ரியமுள்ள நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி கலந்த நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


9 comments:

Saratha J said...

ஆறு ஆண்டுகள் முடிந்து ஏழாம் ஆண்டு தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள் !! இன்னும் நீங்கள் நிறைய குறிப்புகள் கொடுக்க எனது வாழ்த்துக்கள் !!

Angelin said...

7 ஆம் அகவையில் அடிஎடுத்து வைக்கும் உங்கள் மூன்றாவது ப்ளாக் குழந்தைக்கு வாழ்த்துக்கள் ஆசியா :)
என்னதான் முக புத்தகம் வந்தாலும் இந்த ப்ளாக் தானே நம்மை அறிமுகப்படுத்தியது ..நான் இனி வலைப்பக்கம் அடிக்கடி வருவேன் .தொடர்ந்து இங்கும் ரெசிப்பிஸ் போடுங்க என்ன சமைப்பது என்று
பொருட்களை வைத்துக்கொண்டு யோசிப்பதில்லை :)உடனே உங்க ப்ளாக் வந்து ரெசிபி வாசித்து daily புதுசா சமைப்பேன்

சித்ரா சுந்தரமூர்த்தி said...

ஒரே வேலையைத் திரும்பத்திரும்ப செய்யும்போது ஒருவித சலிப்பு ஏற்படுவது இயல்பே. சிறுசிறு இடைவெளிகள் விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

ஏழாம் ஆண்டில் வெற்றிநடை போட வாழ்த்துக்கள் சகோதரி !

priyasaki said...

7ம் ஆண்டில் அடித்து எடுத்து வைக்கும் உங்க தளத்துக்கு என் வாழ்த்துக்கள் ஆசியா.
அஞ்சு சொன்னது மாதிரித்தான்.நானும் ஏதாவது ரெசிப்பிக்கு உங்க பக்கம்தான் பார்ப்பேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு வாங்க ஆசியா.

athira said...

வாழ்த்துக்கள்..

பரிவை சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா...
தொடரட்டும் உங்கள் பயணம்...

Menaga sathia said...

வாழ்த்துக்கள் அக்கா,தொடர்ந்து எழுதுங்கள்...

Asiya Omar said...

நட்புகளின் அன்பான கருத்திற்கும், நல்வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதுப்பாலம் said...

வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்.

-Ismail Kani
Dammam (Saudi Arabia)