Saturday, March 19, 2016

சிக்கன் பாங்கா / Chicken Banga

  
தேவையான பொருட்கள்;
கிரீமி பேஸ்ட் அரைக்க தேவையானவை:
முந்திரி- அரை கப்
பாதாம், பிஸ்தா பருப்பு  தலா - 2 டேபிள்ஸ்பூன்
ஊற வைத்து மையாக அரைத்து எடுக்கவும்.


மசாலாவிற்கு:
சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெள்ளை மிளகு - 3 டேபிள்ஸ்பூன்
வறுத்து ஆற விட்டு பொடி செய்து கொள்ளவும் அத்துடன் 
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
சேர்த்து,சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.

சிக்கன்  துண்டுகள் - முக்கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 3/4 கப் - 1 கப்
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி,புதினா அலங்கரிக்க

செய்முறை:-

 சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
தேங்காய்ப்பால் எடுத்தும் வைக்கவும்.



 ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விடவும். சூடானவுடன் சிக்கன் சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
 சிக்கன் பாதி வெந்து வரட்டும்.
 

பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.

 நன்கு பிரட்டி விட்டு நன்கு வெந்து வரட்டும்.

 அரைத்த முந்திரி, பாதாம்,பிஸ்தா விழுது சேர்க்கவும்.தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
 நன்கு எல்லாம் சேர்ந்து ஒரு சேர சிறிது நேரம்  கொதிக்கட்டும்.
நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.

 சுவையான சிக்கன் பாங்கா தயார்.
பரோட்டா,சப்பாதி,இடியப்பம் நெய் சோற்றுடன் பரிமாறலாம்.
நான் இங்கு சாஃப்ரான் ரைஸ் உடன் பரிமாறி உள்ளேன்.

 இது அல் அய்ன் தோழி ஷபானா வலைப்பூ மூலம் கற்றுக் கொண்டேன்.



3 comments:

பரிவை சே.குமார் said...

நல்ல செய்முறை...
இதெல்லாம் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும் அக்கா....
வாழ்த்துக்கள்.

Valar said...

Wow Asiya, that looks great and I always wanted to make a white gravy chicken and will definitely try it. Thanks for posting it - Valar

Southa rashmi said...

Nice....