Saturday, March 5, 2016

ஈசி மட்டன் ரோஸ்ட் / பீஃப் ரோஸ்ட் / Easy mutton roast / beef roast

 தேவையான பொருட்கள்;
வேக வைக்க:
மட்டன்  அல்லது பீஃப் போன்லெஸ் - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
கடாயில் வறுக்க தேவையான பொருட்கள்;-
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
கிள்ளிய மிளகாய்வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
சிறிய தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1-2 டீஸ்பூன்
உப்பு - சிறிது பார்த்து சேர்க்கவும்.
செய்முறை:
மட்டன் அல்லது பீஃப் சிறு துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
அத்துடன் மேற் சொன்னபடி வேக வைக்க பொருட்கள் சேர்த்து மீடியம் ப்லேமில் குக்கரில் வேக வைக்கவும்.

ஆவியடங்கியவுடன் குக்கரை திறக்கவும். தண்ணீர் சேர்க்காமல் வெந்தால் இப்படி பிரட்டினாற் போல் வெந்து வரும். வேக வைக்க கரியில் ஊறும்  தண்ணீரே வேக போதுமானது.
 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய இஞ்சி, கிள்ளிய வற்றல்கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
 வேக வைத்த கறி சேர்க்கவும்.
 நன்கு பிரட்டவும். தேவைக்கு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
கலர் பிரியப்பட்டால்  பிஞ்ச் சேர்க்கவும்.
 ஒரு தக்காளி நறுக்கி சேர்க்கவும்.மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.தக்காளி மசிந்து கறி சாஃப்டாகி வரும்.
 நன்கு சுருள வதக்கவும். சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான மட்டன் / பீஃப் ரோஸ்ட் ரெடி.
இப்படி  செய்தால் சும்மாவே சாப்பிடலாம். நிறைய பொருட்கள் சேர்க்காமல் சிம்பிளாக செய்தால் அதன்
 சுவையே தனி தான்.